தமிழக ரேஷன் கடைகளில் இலவச தீபாவளி பரிசு – கூட்டுறவு சங்கம் திட்டம்!
தமிழக ரேஷன் கடைகளில் தீபாவளி பண்டிகையை ஒட்டி மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்க உள்ளது குறித்து கூட்டுறவு துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
தீபாவளி பரிசு:
பண்டிகை சமயங்களில் மக்கள் ஏற்றத்தாழ்வுகள் இன்றி அனைவரும் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு முக்கிய பண்டிகை தினங்கள் சமயத்தில் ரேஷன் கடைகளின் மூலம் பொது மக்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது வர இருக்கும் நவம்பர் 12ஆம் தேதி அன்று தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பண்டிகை சமயத்தில் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் விதமாக தமிழக அரசு ரேஷன் கடைகளின் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை, இரண்டு கிலோ சர்க்கரை, துவரம் பருப்பு மற்றும் ஒரு லிட்டர் பாமாயில் ஆகியவற்றை இலவசமாக வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் – உயர் நீதிமன்றத்தின் முக்கிய கருத்து!
இதற்காக தமிழகத்திற்கு என 8,500 டன் கோதுமை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இதனால் தமிழக கூட்டுறவுத் துறையானது ரேஷன் கடைகளில் மக்களுக்கு தேவையான ரேஷன் பொருள்களை இருப்பில் வைத்திருக்கும் படி அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளது. பண்டிகை சமயத்திற்குள் மக்களுக்கு பொருட்களை விநோயோகம் செய்யும் விதமாக வரும் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 5ம் தேதி அனைத்து ரேஷன் கடைகளும் தமிழகத்தில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.