தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அனுமதி – தனியார் பள்ளிகள் கோரிக்கை!!

19
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அனுமதி - தனியார் பள்ளிகள் கோரிக்கை!!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அனுமதி - தனியார் பள்ளிகள் கோரிக்கை!!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அனுமதி – தனியார் பள்ளிகள் கோரிக்கை!!

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்க அனுமதி அளிக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் பல்வேறு ஆலோசனை கூட்டங்களுக்கு பின்னர் 10 மாதங்கள் கழித்து கடந்த ஜனவரி 19ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. முதற்கட்டமாக பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டன. பின்னர் கடந்த பிப்ரவரி 8 முதல் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை பின்பற்றி மாணவர்கள் வகுப்புகளில் பங்கேற்று வருகின்றனர். மேலும் ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர் வீதம் அமரவைக்கப்பட்டு உள்ளனர்.

தமிழக ஊரக வளர்ச்சித்துறை வரை தொழில் அலுவலர் காலிப்பணியிடங்கள் – எழுத்துத்தேர்வு ரத்து!!

பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் பெரிதளவில் கொரோனா பாதிப்பு எங்கும் உறுதி செய்யப்படவில்லை. இதனால் சீரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த பள்ளிக்கல்வித்துறைக்கு கல்வியாளர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் திருப்பத்தூரில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் இளங்கோவன் அவர்கள் தலைமையில் 100க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

TN Job “FB  Group” Join Now

இக்கூட்டத்தில் பேசிய இளங்கோவன், பல்வேறு கருத்துகளை முன்வைத்தார். அவர் கூறுகையில், 10 மாதங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால் ஆசிரியர்களுக்கு தனியார் பள்ளிகள் பகுதி நேரமாக ஊதியம் வழங்கி வந்தன. தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை ஏற்றி, இறக்கி தங்களுக்குள் போட்டி போடாமல் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார். மேலும் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

19 COMMENTS

  1. தனியார் பள்ளிகள் 100% கட்டணத்திற்கு மாணவர்களின் பெற்றோர்களை நிர்பந்திக்கன்றனர் அரசு 30% கட்டணத்தை கட்டிணால் போதும் என்று சட்டம் இயற்ற வேண்டும்

  2. அவசர படவேண்டாம் அரசே!!! பொறுமையே வெல்லும்….. இப்போ ஒன்றும் கெடவில்லை online class நல்ல படி தான் நடக்குது.

    • No keep it children in Ur home itself ok va
      We are interested to going to school after 10 months we stayed I home is not our work stupid

  3. பள்ளி கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று அரசு தரப்பில் ஆணையிட வேண்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!