தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விடுமுறை – கல்வித்துறைக்கு கோரிக்கை!!

0
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விடுமுறை - கல்வித்துறைக்கு கோரிக்கை!!
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விடுமுறை - கல்வித்துறைக்கு கோரிக்கை!!
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விடுமுறை – கல்வித்துறைக்கு கோரிக்கை!!
தமிழகத்தில் கொரோனா பரவல், கோடை வெப்பம் அதிகரித்து வருவதாலும் ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்ப பள்ளி கூட்டணியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கோரிக்கை கடிதம்:

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில், ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவது பாதுகாப்பானதாக இருக்காது என்பதால் கோடை விடுமுறை அளிக்கக்கோரி தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில், பள்ளி கல்வி இயக்குனருக்கும், திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கும் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

CA ஜூன் மாத முதல்நிலை தேர்வு – இன்று முதல் விண்ணப்ப பதிவு!!

ஆசிரியர்கள் பாதிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் சுழற்சி முறையில் 50% ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்கின்றனர். தற்போதைய கொரோனா நிலவரப்படி, இரண்டாம் அலை பாதிப்பு இன்னும் 2 முதல் 3 வாரங்கள் வரை நீடிக்கும் என்று சுகாதாரத்துறை முதன்மை செயலர் அறிவித்துள்ளார். ஏற்கனவே தேர்தல் பணிகளில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பலர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு சில ஆசிரியர்கள் மரணமடைந்துள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

கோடை விடுமுறை:

இந்த நிலையில், திருநெல்வேலியில் வெப்பம் 100 டிகிரியை தொட்டு வருகிறது. ஆசிரியர்கள் கொரோனா தொற்று மற்றும் கோடை வெப்பத்திற்கு இடையில் பள்ளிக்கு வருவதால் மிகுந்த சிரமம் அடைந்து உள்ளனர். இதனால் அவர்களுக்கு மன உளைச்சல் உண்டாக்கி விடும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நோய்தொற்று தாக்கம் குறையும் வரை பள்ளிகளுக்கு செல்வதில் இருந்து ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு விலக்கு அளித்து ஏப்ரல் 20ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here