தமிழக அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை – மாதம் ரூ.62,000 வரை ஊதியம்!

0
தமிழக அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை - மாதம் ரூ.62,000 வரை ஊதியம்!
தமிழக அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை - மாதம் ரூ.62,000 வரை ஊதியம்!
தமிழக அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை – மாதம் ரூ.62,000 வரை ஊதியம்!

தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், காரைக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் காலியாக உள்ள கார் டிரைவர் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

அஞ்சல் துறை பணியிடம்:

தமிழகம் கொரோனா மூன்றாம் அலையிலிருந்து மீண்டு வரும் நிலையில் அரசு மற்றும் தனியார் துறைகள் வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் அரசுத்துறை போட்டித்தேர்வுகளான குரூப் 2 தேர்வு அறிவிப்பு வெளியாகி அதற்கான விண்ணப்ப பதிவுகளும் நடைபெற்று முடிந்துள்ளது. அதனை தொடர்ந்து குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தேர்வுக்கான விண்ணப்பபதிவு தற்போது ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. மற்ற துறைகளை தொடர்ந்து இந்திய அஞ்சல் துறையும் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை அளிக்கும் நோக்கில் காலிப்பணியிடங்களை அறிவித்து வருகிறது.

தமிழகத்தில் விவசாயம் படித்த இளைஞர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

தற்போது வங்கிகளுக்கு இணையாக அஞ்சல்துறையும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் கூடுதல் வட்டி விகிதங்களை அளிக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் காலியாக உள்ள கார் டிரைவர் பணியிடங்கள் குறித்த அறிவிப்பை அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், காரைக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒன்று என்ற கணக்கில் 4 கார் ஓட்டுநர் பணியிடங்கள் உள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சுயவிவர குறிப்பு அடங்கிய விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து The Manager, Mail Motor Service, Tallakulam, Madurai – 625 002 என்ற முகவரிக்கு மே 21ம் தேதிக்குள் அனுப்பிக்க வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பித்தார் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது அவசியமாகும். 56 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியம் ரூ. 18,000 – 62,000 வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!