தமிழக வாகன ஓட்டுனர்களுக்கு இனி அபராதம் – காவல்துறை முக்கிய அறிவிப்பு!

0
தமிழக வாகன ஓட்டுனர்களுக்கு இனி அபராதம் - காவல்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழக வாகன ஓட்டுனர்களுக்கு இனி அபராதம் – காவல்துறை முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் புதிய போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என சென்னை காவல்துறை தமிழக அரசிற்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

காவல்துறை கடிதம்:

மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த புதிய போக்குவரத்து விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்த சட்டத்தின் படி போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு கடுமையான அபராதம் விதிக்க வழிவகுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டம் அனைத்து மாநிலங்களிலும் அமலுக்கு வந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் இந்த புதிய போக்குவரத்து விதி முழுமையாக அமலுக்கு வரவில்லை.

ரேஷன் அட்டை வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு – ஜூன் 30 வரை காலஅவகாசம் நீட்டிப்பு!

இந்நிலையில் அதிகரித்து வரும் விபத்துகளுக்கு போக்குவரத்து விதிமீறல்கள் தான் காரணம் அதனால் போக்குவரத்து விதிமீறல்களுக்கு 10 மடங்கு கூடுதல் அபராதம் விதிக்கும் புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என சென்னை காவல்துறை சார்பில் தமிழக அரசிற்கு கடிதம் எழுதி இருக்கிறது. மேலும் ஒலி மாசு அதிக வாகன ஒலி எழுப்புவதை தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் போக்குவரத்து விதிமீறல்களுக்கு 10 மடங்கு கூடுதல் அபராதம் விதிக்க காவல்துறை அனுமதி கோரி இருக்கிறது. தலைக்கவசம் அணியாதவர்களுக்கு 100 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாகவும், லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 500 ரூபாயில் இருந்து 5000 ரூபாயாக அபராத தொகை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் இந்த சட்டம் இன்னும் முழுமையாக அமல்படுத்தாமல் இருக்கிறது. இந்த திட்டம் மூலமாக ஆண்டுக்கு 200 கோடி ருபாய் வசூலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here