தமிழக காவல்துறையில் 11,741 பணியிட அறிவிப்பு – விண்ணப்பித்து விட்டீர்களா ???

0
தமிழக காவல்துறையில் 11,741 பணியிட அறிவிப்பு - விண்ணப்பித்து விட்டீர்களா
தமிழக காவல்துறையில் 11,741 பணியிட அறிவிப்பு - விண்ணப்பித்து விட்டீர்களா

விண்ணப்பித்து விட்டீர்களா ??? – தமிழக காவல்துறையில் 11,741 பணியிட அறிவிப்பு !

தமிழக அரசு காவல்துறையில் உள்ள Constable, Jail Warden & Firemen பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் மொத்தம் 11,741 பணியிடங்கள் காலியாக உள்ளன. இன்னும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 3 வாரமும் 3 நாட்கள் மட்டுமே உள்ளன.

Try Now – Free Online Test

இந்த 11,741 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்களுக்கான எளிய முறை விளக்கம் மற்றும் Video பதிவை நாங்கள் வழங்கி உள்ளோம். அதன் மூலம் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து கொள்ளலாம்.

“எப்படி விண்ணப்பிப்பது” என்பதற்கான அறிவுரைகள் :

Create/ Vaild Mail Id

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நடப்பில் மற்றும் செயல்பாட்டிலுள்ள மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்விதம் இல்லாதவர்கள் தனக்கென ஒரு புதிய மின்னஞ்சல் முகவரியை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

Download Eligibilty Details Pdf

புதிய பயனாளர் / NEW USER:

 1. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை புதிய பயனாளர் இசைவு படிவத்தில் உள்ளீடு செய்து “Send OTP” எனும் பொத்தானைச் சொடுக்கவும்.
 2. OTP எண்ணானது விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். விண்ணப்பதாரர் OTP எண்ணை உரைப்பெட்டியில் உள்ளீடு செய்து “Verify OTP” எனும் பொத்தானைச் சொடுக்கவும்.
 3. விண்ணப்பதாரர் தமது பெயரை உள்ளீடு செய்து அதற்கான கடவுச்சொல்லை உருவாக்கிக் கொண்டு, அக்கடவுச்சொல்லை உறுதி செய்து மற்றும் சரிபார்ப்பு குறியீட்டு (captcha) சொல்லை உள்ளீடு செய்து புதிய பயனாளர் இசைவு படிவத்தில் “SUBMIT” எனும் பொத்தானைச் சொடுக்கவும்.
 4. பயனாளர் அடையாள எண் உருவாக்கப்பட்டு அந்த பயனாளர் அடையாள எண் மற்றும் கடவுச்சொல் விண்ணப்பதாரருடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். விண்ணப்பதாரர் தங்களுடைய பயனாளர் அடையாள எண் மற்றும் கடவுச் சொல்லை உள்நுழை (Login) பக்கத்தில் இட்டு “login” எனும் பொத்தானைச் சொடுக்கவும்.
 5. இதன் பின்னர், அறிவுரைகள் பக்கம் தோன்றும். விண்ணப்பதாரர் இவ்வறிவுரைகளை கவனமாக படித்த பின்னர் திரையில் உள்ள சரிபார்ப்பு பெட்டியை தெரிவு செய்து “உறுதிமொழி”யை சமர்ப்பித்து பின்னர் “CONTINUE” எனும் பொத்தானைச் சொடுக்கவும்.
 6. இதன்பின்னர் பொதுத்தேர்வு 2020க்கான விண்ணப்பம் தோன்றும்.

விண்ணப்பம் கீழ்காணும் பிரிவுகளை உள்ளடக்கியது :

 • தனி நபர் விவரங்கள்
 • கல்வித் தகுதிகள்
 • கூடுதல் தகவல்கள்
 • புகைப்படம் பதிவேற்றம் செய்தல்
 • கையொப்பபம் பதிவேற்றம் செய்தல்
 • ஒதுக்கீடு / சிறப்பு மதிப்பெண்கள்
 • ஆவணங்கள் பதிவேற்றம் செய்தல்
 • முற்காட்சியுரல்
 • இறுதி முற்காட்சியுரல்

மேலே கூறப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். அவற்றை பூர்த்தி செய்வதற்கான முழு விளக்கம் கீழே உள்ள இணைய முகவரியில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிப்பதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment Box இல் தெரிவிக்கவும். அதற்கான பதில்கள் உடனே தங்களுக்கு வழங்கப்படும்.

Apply Online Video Link

Download Syllabus || Previous Year Question Paper

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here