குற்றவாளிகள் பற்றி தகவல் தெரிவித்தால் வெகுமதி – தமிழக காவல்துறை டிஜிபி அறிவிப்பு!

0
குற்றவாளிகள் பற்றி தகவல் தெரிவித்தால் வெகுமதி - தமிழக காவல்துறை டிஜிபி அறிவிப்பு!
குற்றவாளிகள் பற்றி தகவல் தெரிவித்தால் வெகுமதி - தமிழக காவல்துறை டிஜிபி அறிவிப்பு!
குற்றவாளிகள் பற்றி தகவல் தெரிவித்தால் வெகுமதி – தமிழக காவல்துறை டிஜிபி அறிவிப்பு!

தமிழகத்தில் குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்படும் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை தயாரிப்பவர்களுக்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

காவல் துறை அறிவிப்பு:

தமிழகத்தில் நடக்கப்படும் குற்றச்செயல்களை தடுப்பதற்காக தமிழக காவல்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதேபோல், முன்விரோத கொலை சம்பவங்கள் நடப்பதை தடுக்க எடுக்கப்பட்ட ஆப்பரேஷன் டிஸ்ஆர்ம் என்னும் நடவடிக்கையில் சுமார் 3,325 கொலைக்குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 1,110 பயங்கர ஆயுதங்கள் மற்றும் 7 கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை தயார் செய்பவர்களிடம் 579 கூட்டங்கள் நடத்தப்பட்டதில் அதில் 2,548 பேர் கலந்து கொண்டனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு சார்பில் ரூ.1 லட்சம் பரிசுத்தொகை – ‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி’ விருது!

மேலும் கத்தி, வாள் போன்ற பயங்கரமான ஆயுதங்களை தயாரிப்பை கண்காணிக்கவும், குற்றவாளிகள் கைகளுக்கு செல்வதை தடுக்கவும், தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திர பாபு அவர்கள் காவல் ஆணையாளர்களுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் பல்வேறு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார். இந்த அறிவுறுத்தல்களை அனைத்து காவல் நிலைய அதிகாரியும் முறையாக செயலாக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை தயாரிப்பவர்கள் மற்றும் தயாரிக்கும் இடங்களையும் கவனிக்க வேண்டும்.
  • இது போன்ற பொருட்களை வாங்க முற்படுவோரின் பெயர், முகவரி, கைப்பேசி எண், எந்த காரணத்திற்காக வாங்குகிறார் போன்ற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
  • விவசாயம் மற்றும் வீட்டு உபயோகம் அல்லாமல் மற்ற காரணங்களுக்காக கத்தி போன்ற ஆயதங்களை அடையாளம் தெரியாதவர்களிடம் விற்பனை செய்யக்கூடாது.
  • கண்காணிப்பு கேமராக்களை கடை மற்றும் பட்டறைகளில் பொருத்தப்பட வேண்டும். கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதில் சிரமம் ஏற்பட்டால் காவல்துறை உதவி செய்ய வேண்டும்.
  • குற்றவாளிகள் பற்றிய தகவல்களை காவல்துறைக்கு தெரிவிப்பவர்களுக்கு தக்க வெகுமதி வழங்க வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!