தமிழக காவல்துறை வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு – பொதுமக்கள் கவனத்திற்கு!

0
தமிழக காவல்துறை வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு - பொதுமக்கள் கவனத்திற்கு!
தமிழக காவல்துறை வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு - பொதுமக்கள் கவனத்திற்கு!
தமிழக காவல்துறை வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு – பொதுமக்கள் கவனத்திற்கு!

தமிழகத்தில் இலவசமாக ஓமைக்ரான் பரிசோதனை செய்வதாக கூறி நூதன மோசடி ஒன்று நடந்து வருவதாகவும் இது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக காவல்துறை எச்சரிக்கை:

இந்தியா முழுவதும் ஓமைக்ரான் வைரஸ் தொற்று வேகமெடுத்து வருகிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இலவசமாக ஓமைக்ரான் பரிசோதனை செய்வதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதாக காவல்துறையில் குற்றச்சாட்டு குவிந்துள்ளது. இதனால் தற்போது தமிழகத்தில் பரிசோதனை செய்வது நிறுத்தப்பட்டு விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் தேர்தல் பணியில் உள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கு – முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!

ஓமைக்ரான் பரிசோதனை மூலம் மோசடி செய்பவர்கள் அரசு மற்றும் தனியார் சுகாதார மையங்கள் என்ற பெயரில் இணைப்புகளுடன் RT-PCR சோதனை மின்னஞ்சல்களை அனுப்புகிறார்கள். நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஓமைக்ரான் சோதனை செய்யும் ஆய்வகங்களுக்கான தீங்கிழைக்கும் இணைப்புகளைக் கிளிக் செய்வதன் மூலம், இணையதளத்தில் உள்ள அனைத்து தனிப்பட்ட தகவல்களையும் நிரப்பும்படி அவர்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். மேலும் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பதிவுக் கட்டணமாக பணம் வசூலிக்கப்பட்டு ஏமாற்றப்படுகிறார்கள். தற்போது இதுகுறித்து தமிழக காவல்துறை எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

Post office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

அதில் ஓமைக்ரான் வைரஸ் பரிசோதனைக்கு RT-PCR இலவச பரிசோதனை செய்யப்படும் என்றும் இணையதளங்கள் மூலம் விளம்பரங்கள் வந்து கொண்டிருப்பதாகவும் இந்த விளம்பரத்தை கிளிக் செய்பவர்கள் மோசடியால் நூதனமாக பாதிக்கப்பட்டு வருவதாக புகார்கள் வந்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. எனவே இந்த மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் https://cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என்றும் புகார் அளித்த உடன் உடனடியாக சம்பந்தப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!