2021 சிறந்த டெஸ்ட் வீரர் விருது – தமிழக வீரர் அஸ்வின் பெயர் பரிந்துரை! ரசிகர்கள் உற்சாகம்!

0
2021 சிறந்த டெஸ்ட் வீரர் விருது - தமிழக வீரர் அஸ்வின் பெயர் பரிந்துரை! ரசிகர்கள் உற்சாகம்!
2021 சிறந்த டெஸ்ட் வீரர் விருது - தமிழக வீரர் அஸ்வின் பெயர் பரிந்துரை! ரசிகர்கள் உற்சாகம்!
2021 சிறந்த டெஸ்ட் வீரர் விருது – தமிழக வீரர் அஸ்வின் பெயர் பரிந்துரை! ரசிகர்கள் உற்சாகம்!

இந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதுக்கு இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இதனால் ஜோ ரூட், கைல் ஜேமிசன், திமுத் கருணாரத்னே ஆகியோருக்கு எதிராக அஸ்வின் போட்டியிடுகிறார்.

சிறந்த டெஸ்ட் வீரர் விருது:

தமிழா வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், இலங்கை கேப்டன் திமுத் கருணாரத்னே மற்றும் நியூசிலாந்து இளம் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் ஆகியோருடன் ஐசிசியின் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதில் போட்டியிடுகிறார். கடைசி 8 போட்டிகளில் 16.23 சராசரியில் 52 விக்கெட்டுகளை குவின் வீழ்த்தியுள்ளார். மேலும் ஒரு சதத்துடன் 28.08 சராசரியுடன் 337 ரன்கள் அடித்துள்ளார்.

தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

இந்த ஆண்டு ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நான்கு போட்டிகளில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 14.72 சராசரியில் பௌலிங் செய்தார். மேலும் அந்த தொடரில் 189 ரன்கள் குவித்து தொடர் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக இரண்டாவது தொடர் வெற்றியை பதிவு செய்த இந்தியாவுக்கு அஸ்வினுக்கு முக்கிய பங்கு உண்டு. அஸ்வின் இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் முக்கிய வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு 2022 – இவர்களுக்கு மட்டும் டோக்கன்! முக்கிய அறிவிப்பு!

அந்த டெஸ்ட் தொடரில் மூன்றாவது போட்டியில் இந்திய அணி தோல்வி அடையும் நிலையில் இருந்தது. 128 பந்துகள் மட்டும் மீதம் உள்ள போது விக்கெட்டுகளை கொடுக்காமல் ஹனுமா விஹாரி உடன் சேர்ந்து அந்த பொடியை சமன் செய்தார். நியூசிலாந்திற்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அஸ்வின் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மட்டும் கை கொடுக்கும் விக்கெட்டில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடைசி 2 ஆண்டிலும் அஸ்வினின் பேட்டிங்கும், பௌலிங்கும் சிறப்பாக இருந்ததால் அவர் சிறந்த டெஸ்ட் வீரர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here