தமிழகத்தில் 4,308 மருத்துவ பணியிடங்களில் ‘இவர்களுக்கு’ முன்னுரிமை – சுகாதாரத் துறை அமைச்சர் உறுதி!!

0
தமிழகத்தில் 4,308 மருத்துவ பணியிடங்களில் 'இவர்களுக்கு' முன்னுரிமை - சுகாதாரத் துறை அமைச்சர் உறுதி!!
தமிழகத்தில் 4,308 மருத்துவ பணியிடங்களில் 'இவர்களுக்கு' முன்னுரிமை - சுகாதாரத் துறை அமைச்சர் உறுதி!!
தமிழகத்தில் 4,308 மருத்துவ பணியிடங்களில் ‘இவர்களுக்கு’ முன்னுரிமை – சுகாதாரத் துறை அமைச்சர் உறுதி!!

தமிழக அரசு மருத்துவ பணியாளர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் மூலம் தற்போது நடைபெறும் நியமனங்களில் முன்னதாக பணியாற்றிய ஒப்பந்த ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் உறுதி அளித்துள்ளார்.

முன்னுரிமை:

தமிழகத்தில் தற்போது சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியம் மூலம் 4,308 பணி நியமனகளுக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த நிரந்தர பணியிடங்களில் கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட தற்காலிக ஊழியர்கள் தான் நியமிக்கப்பட வேண்டும் என்று பலதரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் அரசுக்கு வைக்கப்பட்டது. ஆனால் தற்காலிக செவிலியர்கள் நியமனங்களில் அரசின் விதிமுறைகள் எதுவும் கடைபிடிக்கப்படாமல், பல முறைகேடுகள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் நிலவும் வறண்ட வானிலை – உறை பனிக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Follow our Instagram for more Latest Updates

இதனால், தற்காலிக மருத்துவ ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக நியமிப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக அரசு தரப்பில் இருந்து பதிலளிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் MRB மூலம் நியமிக்கப்படும் மருத்துவ ஊழியர்களுக்கான பணியிடங்களில் கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!