TN MRB FSO தேர்வு முடிவுகள் & இறுதி கட்ட விடைக்குறிப்புகள் 2022 – வெளியீடு!
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) ஆனது உணவு பாதுகாப்பு அதிகாரி எனப்படும் Food Safety Officer பதவிக்கான தேர்வு முடிவுகள் & இறுதி கட்ட தேர்வு விடைக்குறிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
TN MRB FSO தேர்வு தேதி:
Food Safety Officer பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த பதவிக்கு என 119 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான கணினி அடிப்படையிலான தேர்வு அக்டோபர் 20 (வியாழன்) அன்று 3 அமர்வுகளாக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றது.
TNPSC Tourist Officer வேலைவாய்ப்பு 2023 – சம்பளம் ரூ.56100-205700/-
Follow our Instagram for more Latest Updates
TN MRB FSO Answer Key:
இப்பணிக்கான முதல் கட்ட விடைக்குறிப்புகள் கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது. அதில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பெறப்பட்ட அனைத்து பிரதிநிதித்துவங்களும் 40 பாட நிபுணர்களால் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டன. முழுமையான ஆய்வுக்குப் பிறகு, திருத்தப்பட்ட மற்றும் இறுதி விடைக்குறிப்பு நிபுணர்களால் தற்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
TN MRB FSO தேர்வு முடிவுகள்:
மேலும் இப்பணிக்கான தேர்வு முடிவுகளும் வெளியாகி உள்ளது. தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரிக்கு சென்று தங்களின் Application No, Date Of Birth மற்றும் Captcha ஆகிய விவரங்களை உள்ளீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.