தமிழக அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அமைச்சர் எச்சரிக்கை!!

0
தமிழக அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு முக்கிய அறிவிப்பு - அமைச்சர் எச்சரிக்கை!!
தமிழக அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு முக்கிய அறிவிப்பு - அமைச்சர் எச்சரிக்கை!!
தமிழக அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அமைச்சர் எச்சரிக்கை!!

தமிழக அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள், தனியார் நிறுவன செட்டாப் பாக்ஸ்களை விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசு கேபிள் டிவி:

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் கடந்த 2007ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களால் தமிழ்நாட்டில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்களின் வாழ்வாதாரத்திற்கும் நிறைந்த சேவையை குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு வழங்குவதற்கும் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் மூலமாகமே அரசின் பல்வேறு சேவைகளை எளிய முறையில் பொதுமக்களுக்கு வழங்க அரசு இ-சேவை மையங்கள் நிறுவப்பட்டது.

வீட்டுக் கடன் வட்டி விகிதம் – முக்கிய விவரங்கள் இதோ!

இந்நிலையில் தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் குறிஞ்சி சிவக்குமார், இன்று ஈரோட்டில் உள்ள கேபிள் டிவி கட்டுப்பாட்டு மையம் மற்றும் அரசு கேபிள் டிவி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதில் ஈரோடு மாவட்டத்தில் சுமார் 93 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் பயன்பாட்டில் இருந்தது. ஆனால் தற்போது சுமார் 23 செட்டாப் பாக்ஸ்கள் பயன்பாட்டில் இல்லை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

இது போல பயன்பாட்டில் இல்லாத செட்டாப் பாக்ஸ்களுக்கு ஆபரேட்டர்களும், அதிகாரிகள் மட்டுமே பொறுப்பு என அவர் தெரிவித்துள்ளார். அதனை மீண்டும் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அவ்வாறு ஒப்படைக்காவிட்டால் அந்த செட்டாப் பாக்ஸ்களுக்கான விலை வசூலிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், சில ஆபரேட்டர்கள் அரசு செட்டாப் பாக்ஸ்களை பொதுமக்களுக்கு வழங்காமல், தனியார் செட்டாப் பாக்ஸ்களை விற்பதாக புகார் எழுந்துள்ளது. புகார்கள் உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!