Tokyo 2020 Paralympic துவக்க விழா – தமிழக வீரர் மாரியப்பன் பங்கேற்க தடை!
டோக்கியோ பாராலிம்பிக் போட்டியின் துவக்க விழாவில் உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் தங்கவேலு பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
டோக்கியோ பாராலிம்பிக்:
டோக்கியோ நகரில் நடைபெறும் பாராலிம்பிக் இன்று முதல் தொடங்கியது. உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதால் 2020 ஆம் ஆண்டு நடக்க இருந்த டோக்கியோ பாராலிம்பிக் காலதாமதமாக இன்று முதல் செம்டம்பர் 5ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த மொத்தம் 4,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தியாவிலிருந்து 54 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
8 முதல் 12ம் வகுப்பு வரை செப்.1ம் தேதி பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
டேபிள் டென்னிஸ், வில்வித்தை, பளு தூக்குதல், நீச்சல் போட்டி, ஈட்டி எறிதல், உயரம் தாண்டுதல், துப்பாக்கி சுடுதல் மற்றும் பல போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி சார்பில் தொடக்க விழா அணிவகுப்பில் தமிழகத்தை சேர்ந்த உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் இந்திய கொடியை ஏந்துவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இவர் 2017ம் தேதி நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார்.
TN Job “FB
Group” Join Now
தற்போது தமிழக வீரர் மாரியப்பன் பாராலிம்பிக் துவக்க விழாவில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றுள்ள சர்வதேச பயணியுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதையடுத்து இவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இவருக்கு கொரோனா நெகட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இன்று நடைபெற உள்ள துவக்க விழாவில் பங்கேற்க வேண்டாம் என ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு குழு அறிவுறுத்தியுள்ளது. தமிழக வீரர் மாரியப்பனுக்கு பதிலாக வீரர் டேக் சந்த் துவக்க விழாவில் இந்திய கொடியை ஏந்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.