படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு ஹாப்பி நியூஸ் – தமிழகத்தில் உங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்..!

0
படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு ஹாப்பி நியூஸ் - தமிழகத்தில் உங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்..!
படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு ஹாப்பி நியூஸ் - தமிழகத்தில் உங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்..!
படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு ஹாப்பி நியூஸ் – தமிழகத்தில் உங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்..!

தமிழக உயர்கல்வித் துறையின் வரலாற்றில் முதல் முறையாக சென்னை பல்கலைக்கழகத்தில் மாற்றுத் தினாளிகளுக்கென வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வேலைவாய்ப்பற்ற (PwD) மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு முகாமில் பல முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. எனவே வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கும் நபர்கள் இப்பதிவை முழுமையாக படித்து விட்டு இப்பதிவின் மூலம் தங்களின் பதிவுகளை எளிமையாக செய்து கொள்ள அழைக்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

நிறுவனம் TN Higher Education Department
பணியின் பெயர் Job Fair (PwD)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

Job Fair காலிப்பணியிடங்கள்:

சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழக உயர்கல்வித்துறையால் நடைபெற உள்ள வேலைவாய்ப்பு முகாமில் தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Job Fair கல்வித் தகுதி:

இதன் முகாமில் கலந்து கொள்ள (PwD) மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருப்பவர்கள் மட்டுமே கலந்து கொள்ள தகுதியானவர்கள்.

மேலும் 2018 முதல் 2022ம் ஆண்டுக்குள் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே இந்த முகாமில் கலந்து கொள்ள தகுதியானவர்கள் என்று அறிவித்துள்ளது. கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

Job Fair வயது விவரம்:

இந்த முகாமில் கலந்து கொள்ள விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 29 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும் என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 29 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

Job Fair அனுபவ விவரங்கள்:

இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாக அமையும். மேலும் முன் அனுபவம் இல்லாத பட்டதாரிகளும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், முன் அனுபவம் இல்லாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

Job Fair ஊதிய விவரம்:

இந்த முகாமில் பல்வேறு நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பல்வேறு பணிகளுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் தகுதிக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

Job Fair தேர்வு முறை:

இந்த முகாமில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக தகுதி மற்றும் திறனுக்கு ஏற்றார்ப்போல் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் கூடுதல் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

Job Fair விண்ணப்பிக்கும் முறை:

இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள ஆர்வம் மற்றும் விருப்பமுள்ள நபர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பை கிளிக் செய்து அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று முன் பதிவுகளை மேற்கொள்ளவும். அதன் பின் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 18.06.2022 தினத்தன்று காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணிக்குள் நேரில் சென்று கலந்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

Job Fair Notification & Application

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!