தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு? முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!

0
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு? முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு? முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு? முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இன்று தலைமை செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் முடிவில் பல முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. இதனால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விடுமோ என்கிற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.

முக்கிய உத்தரவு:

இன்று தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, தமிழ்நாட்டில்‌ மீண்டும்‌ கொரோனா நோய்த்‌ தொற்று அதிகரிப்பதை தடுக்க தமிழக அரசின்‌ தலைமைச்‌ செயலாளர்‌ அவர்களின்‌ தலைமையில்‌ சம்பந்தப்பட்ட துறைகளின்‌ ஆய்வுக்‌ கூட்டம்‌ இன்று நடத்தப்பட்டது. அண்மை காலங்களில்‌ உலக அளவில்‌ மட்டுமல்லாமல்‌, இந்தியாவின்‌ பல மாநிலங்களில்‌ நோய்த்‌ தொற்று மீண்டும்‌ அதிகரிக்கத்‌ தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவில்‌, மகாராஷ்டிராவில்‌ நாளொன்றுக்கு 16,000-க்கும்‌ அதிகமாகவும்‌, கேரளாவில்‌ சுமார்‌ 2,000 நபர்களுக்கும்‌, கர்நாடகாவில்‌ 900-க்கும்‌, குஜராத்தில்‌ 800-க்கு மேலும்‌, டெல்லியில்‌ 400-க்கு மேலும்‌, பஞ்சாப்‌ மாநிலத்தில்‌ 1400-க்கு மேலும்‌ நோய்த்‌தொற்று பதிவாகி வருகிறது.

தமிழகத்தில் அரசு பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை – தலைமை ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு!!

தமிழ்நாட்டைப்‌ பொறுத்தவரை அரசின்‌ சிறப்பான நடவடிக்கைகளினால்‌, நோய்த்‌ தொற்று விகிதம்‌ கடந்த ஜனவரி மற்றும்‌ பிப்ரவரி மாதங்களில் ஒரு சதவிகிதமாக கொண்டு வரப்பட்டது. மேலும்‌, இந்நோயால்‌ பாதிக்கப்பட்டவர்களின்‌ எண்ணிக்கை நாள்‌ ஒன்றுக்கு சுமார்‌ 500 நபர்களுக்கு கீழாக கொண்டு வரப்பட்டது. ஆனால்‌ கடந்த 10 நாட்களாக படிப்படியாக நோய்த்‌ தொற்றின்‌ அளவு உயர்ந்து தற்போது 1.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னை, கோயம்புத்தூர்‌ ஆகிய மாவட்டங்களில்‌ 2 சதவிகிதத்திற்கு சற்று மேலாக உள்ளது.

8 வங்கிகளின் பாஸ்புக் ஏப்ரல் 1 முதல் செல்லாது – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!

செங்கல்பட்டு, திருவள்ளூர்‌, திருப்பூர்‌, காஞ்சிபுரம்‌, தஞ்சாவூர்‌, நாகப்பட்டினம்‌ ஆகிய மாவட்டங்களில்‌ 1 சதவிகிதத்திற்கு மேலாகவும் பதிவாக தொடங்கியுள்ளது. சிகிச்சையில்‌ இருப்போரின்‌ எண்ணிக்கை மார்ச்‌ முதல்‌ வாரத்தில்‌ 4,000-க்கும்‌ குறைவாக இருந்து, தற்போது அதிகரித்து வருகிறது. இறப்பு எண்ணிக்கை படிப்படியாகக்‌ குறைந்து அண்மை காலங்களில்‌ நாளொன்றுக்கு 5-க்கும்‌ கீழே பதிவாகி வருகிறது.

TN Job “FB  Group” Join Now

இருப்பினும்‌ கடந்த ஆண்டு நிலவிய சூழலைவிட, இது குறைந்த அளவே இருந்தாலும் கூட, நோய்த்‌ தொற்று அதிகரித்து வருவதை கருதி அதை மேலும்‌ தீவிரமாக கண்காணிக்க அனைத்து நடவடிக்கைகளை மாவட்ட வாரியாக தலைமைச்‌ செயலர்‌ ஆய்வு நடத்தினார்‌. இந்த கூட்டத்தில்‌ தமிழ்நாட்டின்‌ கொரோனா‌ தொற்று நிலைமையை பற்றி விரிவாக மாவட்ட ஆட்சியாளர்களுடன்‌ ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மார்ச் 17ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிக்கை!!

  1. பொது இடங்களில்‌ பொதுமக்கள்‌ முகக்கவசம்‌ அணிவதையும்‌, அரசு வெளியிட்ட நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை நிறுவனங்கள்‌ கடைபிடிப்பதையும்‌, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு, சுகாதாரத்‌ துறை, காவல்‌ துறை, வருவாய்த்‌ துறையினர்‌ கண்காணிக்க வேண்டும்‌. இதனை மீறுபவர்கள்‌ மீது பொது சுகாதார சட்டத்தின்‌ கீழ்‌ அபராதம்‌ விதிக்க வேண்டும்‌.
  2. அலுவலகங்கள்‌, நிறுவனங்கள்‌, தொழிற்சாலைகள்‌, உணவகங்கள்‌ போன்ற பொது இடங்களுக்கென ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள தெளிவான நெறிமுறைகள்படி கிருமிநாசினி உள்ளதா எனவும்‌, மக்களுக்கு காய்ச்சல்‌ உள்ளதா என பரிசோதனை செய்ய உறுதிபடுத்த வேண்டும்‌.
  3. கட்டுப்பாட்டுப்‌ பகுதிகளின்‌ நெறிமுறைகளாகிய மக்கள்‌ நடமாட்டத்தை கட்டுப்படுத்துதல்‌, அத்தியாவசிய
    தேவைகளுக்கு மக்கள்‌ கூடும்‌ இடங்களாகிய பொது குழாய்‌ இருக்கும்‌ இடம்‌, பொது கழிப்பிடம்‌ போன்ற இடங்களில்‌ கண்கூடாக தெரியும்படி கிருமி நாசினி தெளித்தல்‌, போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்‌.
  4. கோவிட்‌ தொற்று உள்ளவர்களின்‌ தொடர்பில்‌ இருந்தவர்களை கண்டறிந்து, தனிமைப்படுத்தி, பரிசோதனை செய்து மாதிரிகள்‌ எடுக்கவேண்டும்‌. தொற்று உள்ளவர்களுக்கு உரிய நேரத்தில்‌ தாமதமின்றி உரிய சிகிச்சை அளிக்கவேண்டும்‌. கூட்டாக நோய்‌ தொற்று ஏற்படும்‌ பகுதிகளில்‌ உரிய அலுவலர்களை நியமித்து அதனை உறுதி செய்து தகுந்த நோய்‌ கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்‌ எடுக்கப்பட வேண்டும்‌.
  5. காய்ச்சல்‌ முகாம்களை அதிகப்படுத்தி, நோய்‌ தொற்று உள்ளவர்களை கண்டறிந்து, தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்‌.
  6. நோய்‌ தொற்று உள்ள இடங்களில்‌ நோய்‌ தொற்றை தடுக்க சிறப்புத்‌ திட்டம்‌ செயல்படுத்தி கிருமி நாசினி தெளிக்க வேண்டும்‌.
  7. தகுதி வாய்ந்த நபர்களுக்கு தடுப்பூசி செலுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்‌. நோய்‌ தொற்று அதிகம்‌ உள்ள பகுதிகளில்‌ சிறப்பு கவனம்‌ செலுத்தி இதனை விரிவாக்கம்‌ செய்ய வேண்டும்‌.
  8. வீட்டில்‌ தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களை கடந்த ஆண்டைப்போல்‌ கண்காணிக்க வேண்டும்‌.
  9. மக்கள்‌ அதிகமாக கூடும்‌ தேர்தல்‌ பிரச்சார கூட்டங்கள்‌, கலாச்சார, வழிப்பாட்டு மற்றும்‌ இன்னபிற கூட்டங்களுக்கு பொது மக்கள்‌ முகக்கவசம்‌ அணிவதை கட்டாயம்‌, என நிபந்தனை விதித்து அனுமதி அளித்திட வேண்டும்‌. அதனை சம்பந்தப்பட்ட துறையினர்‌ உறுதிபடுத்திட வேண்டும்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!