தமிழகத்தில் அடுத்த கட்ட தளர்வுகள் !!!! – அனுமதிக்கப்பட்டவை எவை ???

0
தமிழகத்தில் அடுத்த கட்ட தளர்வுகள்
தமிழகத்தில் அடுத்த கட்ட தளர்வுகள்

தமிழகத்தில் அடுத்த கட்ட தளர்வுகள் !!!! – அனுமதிக்கப்பட்டவை எவை ?

தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதியோடு முடிவடையவுள்ள நிலையில் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் என்னென்ன தளர்வுகள் அறிவிக்கப்பட உள்ளது என்றும் விவாதிக்கப்படுகிறது

மக்கள் மத்தியில் பொது போக்குவரத்தை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. இ பாஸ் ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டநிலையில் தமிழ்நாடு அரசு அதில் சில தளர்வுகளை மட்டும் அறிவித்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து தொழில் நிமித்தம் வருபவர்களுக்கு உடனடியாக இ பாஸ் வழங்கப்படும் என்றும், 72 மணி நேரத்தில் திரும்புபவர்களுக்கு தனிமைப்படுத்துதலில் விலக்கு அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

புதிதாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ள தளர்வுகள் :
  • கோயம்பேடு காய்கறி சந்தையில் செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் உணவு தானியங்கள் விற்பனையும், 28ஆம் தேதி முதல் காயகறி விற்பனையும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அந்தவகையில் பொதுப் போக்குவரத்தைப் பொறுத்தவரையில் மண்டலங்களுக்குள் மட்டும் பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுவருவதாக கூறப்படுகிறது.
  • கடந்த முறை மண்டலங்களுக்குள் பேருந்து சேவை தொடங்கப்பட்ட போது சென்னைக்கு மட்டும் தடை தொடரும் என அறிவிக்கப்பட்டது. இந்த முறை அதற்கு அனுமதியளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • தெற்கு ரயில்வே தமிழக அரசின் உத்தரவுக்காக மட்டுமே காத்திருக்கிறது. மண்டலங்களுக்குள் பேருந்து சேவையை தமிழக அரசு தொடங்கினால் ஏற்கெனவே தெற்கு ரயில்வேயால் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் மீண்டும் இயக்கப்பட வாய்ப்புள்ளது.
  • சென்னை மெட்ரோ சேவையை இயக்க ஆய்வு நடைபெற்று வருகிறது. டெல்லியில் மெட்ரோ சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதை ஒட்டியும், மத்திய அரசின் அறிவிப்பை ஒட்டியும் தமிழ்நாடு அரசு இது குறித்து முடிவெடுக்கும்.
  • ஞாயிற்றுக் கிழமைகளில் கடைகள் திறந்திருக்கும் நேரம் இரவு 9 மணி வரை அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது.
  • சுற்றுலாத் தலங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்களுக்கான தடை தொடரும் என்றே உறுதியான தகவல்கள் வருகின்றன. படப்பிடிப்புகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில் திரையரங்குகள் திறக்கப்படுமா என்ற கேள்வியெழுப்பப்படும் நிலையில் ஏசி இல்லாத திரையரங்குகள் திறக்கப்படலாம் என சிலர் கூறுகின்றனர்.
  • பள்ளிகள், கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை என கூறப்படும் நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மாவட்ட நூலகங்கள், பிற பெரிய நூலகங்கள் திறக்கப்படவுள்ளன.
  • ஆண்டு வருமானம் பத்தாயிரத்துக்கு குறைவாக உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில் பெரிய கோயில்களுக்கு அனுமதியளிக்க வாய்ப்புள்ளது.
  • அரசு அலுவலகங்கள் சுழற்சி முறையில் இயங்கிவரும் நிலையில் 100 சதவீத ஊழியர்களுடன் முழு வீச்சில் இயங்கப்படவுள்ளது. வீட்டிலிருந்து பணியாற்ற வாய்ப்புள்ள ஊழியர்களுக்கு அதற்கான அனுமதி வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
  • முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அதன் பின்னரோ அல்லது அதற்கு முன்னதாகவோ முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளன.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!