தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு – நாளை முதல் அமல்!
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் நிலவரத்தை கருத்தில் கொண்டு ஜூன் 28ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டு இருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த தளர்வுகள் அனைத்தும் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
தமிழகத்தில் கடந்த மே 10ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக பல்வேறு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பின் அடிப்படையில் மாவட்டங்களில் 3 வகைகளாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது. ஜூன் 28 வரை நீட்டிக்கப்பட்டு இருந்த ஊரடங்கில் வகை 1 இல் உள்ள 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்படவில்லை. தற்போது மேலும் ஒரு வாரம் அதவாது ஜூலை 5 வரை கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
வகை 1 – கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை
வகை 2 – அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர்
வகை 3 – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு
இதில் வகை 1 இல் உள்ள மாவட்டங்களில் ஜூன் 28 முதல் கடைகள் தினசரி மாலை 7 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. தேநீர் கடைகள், குளிர்சாதன வசதியின்றி செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அரசின் அனைத்து அத்தியாவசியத் துறைகள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். இதர அரசு அலுவலகங்கள், 50% பணியாளர்களுடன் செயல்படலாம் என கூறப்பட்டுள்ளது. இ-சேவை மையங்கள், விளையாட்டு பயிற்சி, பூங்காக்களை திறக்கலாம்.
தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டை பெற விண்ணப்பிப்போர் கவனத்திற்கு!!
வகை 2 இல் உள்ள மாவட்டங்களில் பேருந்து பொது போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டங்களுக்கிடையே பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். அனைத்து தனியார் நிறுவனங்கள், 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதியளிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு? அமைச்சர் விளக்கம்!
வகை 3 இல் உள்ள மாவட்டங்களில் மத வழிபாட்டு தலங்களை பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் விழாக்கள், குடமுழுக்குகளை நடத்த அனுமதியில்லை. தனியார் அலுவலகங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம். அனைத்து துணிக் கடைகள், நகைக்கடைகள் ஆகியவை குளிர் சாதன வசதியில்லாமல் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் மாலை 7 மணிவரை இயங்கலாம். வணிக வளாகங்கள் மாலை 7 மணிவரை இயங்கலாம்.