தமிழகத்தில் நவ. 18 சட்ட மன்ற சிறப்பு கூட்டத்தொடர் – வெளியான முக்கிய தகவல்!
தமிழக அரசு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிய 10-க்கும் மேற்பட்ட சட்ட மசோதாகளை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் சனிக்கிழமை சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என
சிறப்பு கூட்டத்தொடர்:
இந்திய சட்டத்தின் படி மாநில அரசு சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டியது கட்டாயம். அதன் அடிப்படையில் சட்ட மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது இதுவரை 12க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இழுவையில் வைத்துள்ளார் இது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
TN TRB CMRF தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு – உடனே பாருங்க!
இந்த வழக்கு மீண்டும் 20ம் தேதி விசாரணைக்கு வர உள்ள நிலையில் தற்போது நிலுவையில் வைத்திருந்த பத்துக்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்கள் கவர்னர் அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார். இந்த நிலையில் நவம்பர் 18 ஆம் தேதி தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளத. இந்த கூட்டத்தில் கவர்னர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.