தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் அறிவிப்பு 2018 – 177 பணியிடங்கள்

0

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் அறிவிப்பு 2018 – 177 பணியிடங்கள்

தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய தலைமை அலுவலகம், அனைத்து மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகங்கள் மற்றும் துயில் கூடங்களில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 02.11.2018 மாலை 5.45 மணிக்குள் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

பணியிடங்கள் மற்றும் கல்வி தகுதி விபரங்கள்:

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்து இருக்க வேண்டும். அதிகபட்சம் 30 வயது பூர்த்தியடைந்து இருக்க கூடாது. விண்ணப்பதாரர்களின் பிரிவு வகையின் அடிப்படையில் அதிக பட்ச வயது வரம்பு மாறுபடும் எனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம் ஏற்ற முறை : ரூ 19500 – 62000/-

தெரிவு செய்யும் முறை: எழுத்துத் தேர்வில் (பத்தாம் வகுப்பு தரம்) பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்குத் வாரியத்தால் அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் உத்தேசப்பட்டியல் பதவிவாரியாக  தனித்தனியே இணையதளத்தில் வெளியிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.100/-க்கான வங்கி வரைவோலை (DD payable at Chennai)

விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் புகைப்படம் ஓட்டி, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து செயலாளர், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம், 8, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம், சென்னை – 600 034 என்ற முகவரிக்கு “The Secretary, TNCWWB”  என்ற பெயரில் ரூ.100/-க்கான வங்கி வரைவோலை (DD payable at Chennai) இணைத்து அனுப்பிவைக்க வேண்டும். விண்ணப்பங்கள் பெறப்பட வேண்டிய கடைசி நாள் 02.11.2018 மாலை 5.45 மணி வரை. 

முக்கிய நாட்கள்:

அறிவிக்கை நாள் 17.10.2018
விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் 02.11.2018

 

முக்கிய இணைப்புகள்:

அதிகாரபூர்வ அறிவிப்பு பதிவிறக்கம்
அதிகாரபூர்வ இணையத்தளம் கிளிக் செய்யவும்
விண்ணப்ப படிவம் (Junior Assistant) பதிவிறக்கம்
விண்ணப்ப படிவம் (Computer Operator) பதிவிறக்கம்

Tamil NaduGroup -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here