தமிழக நீதித்துறையில் 5000+ காலிப்பணியிடங்கள் – உடனே நிரப்ப கோரிக்கை!

0
தமிழக நீதித்துறையில் 5000+ காலிப்பணியிடங்கள் - உடனே நிரப்ப கோரிக்கை!
தமிழக நீதித்துறையில் 5000+ காலிப்பணியிடங்கள் - உடனே நிரப்ப கோரிக்கை!
தமிழக நீதித்துறையில் 5000+ காலிப்பணியிடங்கள் – உடனே நிரப்ப கோரிக்கை!

தமிழகத்தில் மொத்தமாக 1200 நீதிமன்றங்கள் செயல்பட்டு வரும் நிலையில், அதில் 5,070 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதனால் நீதிமன்ற வழக்குகளில் தேக்கம் ஏற்படுவதால், உடனே இந்த காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற காலிப்பணியிடங்கள்:

நமது நாட்டின் முக்கியமான துறையாக நீதித்துறை இருக்கிறது. எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருப்பவராக இருந்தாலும் அவர் நீதித்துறையின் சட்டதிட்டங்களை கடைபிடிக்க வேண்டும். அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில், சுமார் 1200 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. அதில் 25,322 பணியிடங்கள் இருக்கும் நிலையில், 20,252 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மீதமுள்ள 5,070 பணியிடங்கள் காலியாக உள்ளன.

அதில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் மொத்தம் 3,205 நீதிமன்ற பணியிடங்கள் இருக்கின்றன. அதில் சுமார் 722 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் கோவை மாவட்டத்தில் மட்டும் 197 பணியிடங்களும், நீலகிரி மாவட்டத்தில் 146 பணியிடங்களும், திருப்பூர் மாவட்டத்தில் 277 பணியிடங்களும், ஈரோடு மாவட்டத்தில் 146 காலிப்பணியிடங்களும் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

RRB Group D தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மேலும் புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருப்பத்துார், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, தென்காசி ஆகிய ஆறு மாவட்டங்களில் நீதித்துறை நிர்வாகம் இன்னும் தனியாக பிரிக்கப்படவில்லை. இந்த மாவட்டங்களில் நீதித்துறை பிரிக்கப்பட்டால் மேலும் காலி இடங்கள் அதிகரிக்கும். மேலும் நீதிபதி பணியிடங்களில் மொத்தம் 1,332 பணியிடங்கள் இருக்கிறது. அதில் தற்போது 1,073 நீதிபதிகள் பணிபுரிகின்றனர். இன்னும் 259 பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன.

Exams Daily Mobile App Download

கோவை மாவட்டத்தில் 12 நீதிபதி பணியிடங்களும், நீலகிரி மாவட்டத்தில் 5 நீதிபதி பணியிடங்களும், ஈரோடு மாவட்டத்தில் 9 பணியிடங்களும் காலியாக இருப்பதாகவும், அந்த பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதனால் நீதிமன்ற வழக்குகளில் தேக்கம் ஏற்படுவதால் இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலியிடங்கள் நிரப்பப்பட்டால் இந்த வழக்குகள் தேக்கம் குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!