தமிழகத்தில் 54 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு – 24 புதிய திட்டங்களுக்கு அஸ்திவாரம் !!!

6
தமிழகத்தில் 54 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு - 24 புதிய திட்டங்களுக்கு அஸ்திவாரம் !!!
தமிழகத்தில் 54 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு - 24 புதிய திட்டங்களுக்கு அஸ்திவாரம் !!!

தமிழகத்தில் 54 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு – 24 புதிய திட்டங்களுக்கு அஸ்திவாரம் !!!

தமிழகத்தில் தற்போது தொழில் துறை சார்பில், 19,995 கோடி ரூபாய் முதலீட்டில் 18 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த முதலீடுகள், மின்சார வாகனங்கள், சூரிய மற்றும் காற்றாலை சக்தி, மருந்துப் பொருட்கள், நகர எரிவாயு, இணைய வழிக் கல்வி, ஜவுளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அதன் மூலம் பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வேலைவாய்ப்பு !

நாட்டில் வேலைவாய்ப்பின்மை பிரச்சனையினை போக்க மத்திய/ மாநில அரசுகளும் பல்வேறு நிறுவனங்களுடன் தொழில் முதலீட்டு மாநாட்டை நடத்தி வருகிறது. படித்தும் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் சமீப காலமாக கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கு உத்தரவு அறிவித்தது. அதன் காரணமாக பலரும் தங்களின் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். இதனால் வேலையில்லா திண்டாட்டத்தின் நிலை அதிதீவிரமாக உள்ளது.இதனை கட்டுப்படுத்த தற்போது தமிழக அரசு புதிய தொழில் முதலீடு மாநாட்டை ஏற்படுத்தி உள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் :

தமிழக அரசு மேற்கொண்ட 18 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் அவரின் முதலீடுகள் ஆகியவற்றினை கீழே விளக்கமாக வழங்கியுள்ளோம். மேலும் அதன் மூலம் வேலைவாய்ப்பினை பெறுவோரின் எண்ணிக்கையும் வழங்கப்பட்டுள்ளது.

Ola Electric Mobility :
  • மின்சார வாகனத்துறையிலும் நுகர்வோருக்கேற்ப மின் வாகனங்கள் உற்பத்தியிலும் செயல்படும் இந்நிறுவனத்தில் 2,354 கோடி ரூபாய் முதலீட்டில் 2,182 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்ட உள்ளது.
Torrent gas chennai private limited :
  • நகர எரிவாயு விநியோக வலையமைப்பு நிறுவனமான இதில் 5000 கோடி ரூபாய் முதலீட்டில் 5000 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்ட உள்ளது.
Temple -Arizona :
  • இந்நிறுவனம் மூலம் Thin Film Photo Voltaic Solar Modules தயாரிக்கும் பணிகளில் 4185 கோடி முதலீட்டில் 1076 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்ட உள்ளது.
Society for Smart Electric Mobility :
  • 2500 கோடி முதலீட்டில் மின்சார வாகனங்களுக்கான தொழிற் பூங்கா அமைக்கப்பட்டு 1000 பேருக்கு வேலை வழங்கப்பட உள்ளது.
Voltas
  • இந்நிறுவனம் மூலம் வணிக குளிர் பதன தயாரிப்புகளில் 1001 கோடி முதலீட்டில் 2000 பேருக்கு வேலை வழங்கப்பட உள்ளது.
BANK
BANK
Mylan laboratories
  • சிறப்பு மருந்து உற்பத்தி நிறுவனமான இதில் 350 கோடி ரூபாய் முதலீட்டில் 250 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்ட உள்ளது.
Gurit india private limited
  • இந்த காற்றாலை எரிசக்தித் துறை நிறுவனம் மூலம் 320 கோடி ரூபாய் முதலீட்டில் 300 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்ட உள்ளது.
Yaclass
  • சர்வதேச கல்வி இணைய நிறுவனமான இதில் 300 கோடி முதலீட்டில் 1000 பேருக்கு வேலை வழங்கப்பட உள்ளது.
KPR Sugar and Apparels ltd
  • நூல் துணிகள், ஆடைகள் மற்றும் வெள்ளை கிரிஸ்டல் சர்க்கரை துறையில் 250 கோடி முதலீட்டில் 5000 பேருக்கு வேலை வழங்கப்பட உள்ளது.
Magnus Infrastructure :
  • 250 கோடி முதலீட்டில் தொழிற் பூங்கா அமைக்கப்பட்டு 150 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்ட உள்ளது.
Stanadyne
  • உலகளாவிய வாகன தொழில் நுட்ப நிறுவனமான இதில் 180 கோடி முதலீட்டில் 1500 பேருக்கு வேலை வழங்கப்பட உள்ளது.
Mahindra CIE
  • உலைக்கள மோட்டார் வாகன உதிரி பாகங்களை தயாரிக்கும் நிறுவனமான இதில் 100 கோடி முதலீட்டில் 500 பேருக்கு வேலை வழங்கப்பட உள்ளது.
Anjan drugs

Bulk drugs / APIs உற்பத்தி திட்டத்தின் மூலம் இந்நிறுவனத்தில் 60 கோடி முதலீட்டில் 500 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்ட உள்ளது.

Maiva pharma
  • sterlite liguid injections தயாரிக்கும் இந்நிறுவனத்தில் 50 கோடி முதலீட்டில் 220 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்ட உள்ளது.
Eickoff wind asia private limited

இயந்திரங்கள் மற்றும் பற்சக்கர தொழில் நுட்ப உற்பத்தி நிறுவனமான இதில் 410 கோடி முதலீட்டில் 525 பேருக்கு வேலை வழங்கப்பட உள்ளது.

cubic modular systerms
  • எலக்ட்ரோ மெக்கானிக் துறையை சேர்ந்த இந்நிறுவனத்தில் 120 கோடி முதலீட்டில் 106 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்ட உள்ளது.

sabaf

  • எரிவாயு பர்னர்களை உருவாக்கும் இந்நிறுவனத்தில் 75 கோடி முதலீட்டில் 200 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்ட உள்ளது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

6 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!