அரசு பள்ளிகளில் கூடுதல் மாணவர்களுக்கு புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படுமா?

0
அரசு பள்ளிகளில் கூடுதல் மாணவர்களுக்கு புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படுமா
அரசு பள்ளிகளில் கூடுதல் மாணவர்களுக்கு புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படுமா

அரசு பள்ளிகளில் கூடுதல் மாணவர்களுக்கு புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படுமா?

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இந்த கல்வியாண்டில் கூடுதலாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கு புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்ட வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

தமிழக அரசு பள்ளி :

தமிழகத்தில் சுமார் 12,500க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் செயல்பட்டு கொண்டுள்ளன. அவற்றில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையினை பொறுத்து ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படுவது வழக்கம். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆசிரியர்களும் இருக்க வேண்டும் என்பது அரசு விதி ஆகும்.

ஆசிரியர் பணியிடங்கள் :

இந்த ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தாலும், அரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை இந்த முறை உயர்ந்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க மாநில தலைவர் பீட்டர்ராஜா,”அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு 5.18 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடால் 405 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.அதிகரித்துள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்,” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், “பள்ளிகள் திறக்கப்பட்டால் கிடைக்கும் குறைந்த நாட்களில் கற்பித்தல் பணிக்கு மட்டும் திட்டமிட வேண்டும். இதனால் பொது மாறுதல் கலந்தாய்வு, ஆசிரியர்களுக்கான உட்கட்டமைப்பு மேம்பாடுகளை கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும்,” என்றார். இதனால் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNEB Online Video Course

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here