இன்று முதல் தமிழகத்தில் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை – தமிழக அரசு அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் கொரோனா தொற்று 3ம் அலை பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை முக்கிய கோவில்களில் பக்தர்களின் நேரடி தரிசனத்திற்கு அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
அரசின் உத்தரவு:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவல் அரசின் தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு பின்னர் தற்போது சில வாரங்களாக மட்டுமே மெல்ல குறைந்து வருகிறது. கடந்த 6 மாதங்களாக தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் பரவல் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது. கடந்த மே 10ம் தேதி முதல் கட்டமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தமிழகத்தில் அமலுக்கு வந்தது. தற்போது ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 9ம் தேதி வரை அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை பல கட்டங்களாக நீடித்து வருகிறது.
தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டு வளர்ச்சி திட்டங்கள் – அமைச்சர் ஆய்வு!
தற்போது, தமிழகத்தில் ஆடி மாத கிருத்திகையை ஒட்டி பல முக்கிய பூஜைகள் கோயில்களில் செய்யப்படும். இதனால் மக்கள் அதிக அளவில் சிறப்பு பூஜைகளுக்காக கோயில்களில் தரிசனத்திற்கு செல்வார்கள். இந்நிலையில், தமிழகத்தில் மெல்ல மீண்டும் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே, கொரோனா 3ம் அலை பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
மேலும், சென்னையிலும் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், அங்காடிகள் என குறிப்பிட்ட ஒன்பது இடங்கள் இயக்கத்திற்கு அரசு தடை விதித்துள்ளது. மேலும், மாவட்டங்களில் உள்ள நிலைமையை பொறுத்து மாவட்ட நிர்வாகத்தினர், காவல்துறையினருடன் இணைந்து கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் மதுரையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவில், மீனாட்சி அம்மன்கோவில்,அழகர்கோவில், பழமுதிர்சோலை, ஆகியவற்றில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வரும் 2ம் தேதி முதல் 9 ம் தேதி வரையில் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், சென்னையில் உள்ள கோயில்களிலும் நேரடி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.