தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 58 ஆக குறைப்பு? கி.வீரமணி வலியுறுத்தல்!

0
தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 58 ஆக குறைப்பு? கி.வீரமணி வலியுறுத்தல்!
தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 58 ஆக குறைப்பு? கி.வீரமணி வலியுறுத்தல்!
தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 58 ஆக குறைப்பு? கி.வீரமணி வலியுறுத்தல்!

தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து விட்டு வேலை இல்லாமல் ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் சூழலில், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 இல் இருந்து 58 ஆக குறைக்க வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வலியுறுத்தி உள்ளார்.

ஓய்வு வயது குறைப்பு:

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டது. இதனால் அரசுக்கு வருவாய் குறைந்தது. எனவே செலவினங்களை குறைக்கும் நோக்கில் சிக்கன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதனால் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 இல் இருந்து 59 ஆக உயர்த்தப்பட்டது. இதனால் அரசுக்கு ஓய்வூதிய பலன்களில் இருந்து மிகப்பெரிய செலவு மிச்சமானது. மேலும் அதிமுக தலைமையிலான அரசு, மத்திய அரசு ஊழியர்களை போல் தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதையும் 60 ஆக உயர்த்தியது.

Jio, Airtel, VI நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்டம் – ஒரு நாளைக்கு 2 GB டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ்!

இதற்கு அரசு ஊழியர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்த நிலையில், இளைஞர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. தற்போது திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவியேற்றதும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும் வேலைவாய்ப்பை பெருக்கும் நோக்கில் தொழில் முதலீடு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உள்ளார். இந்நிலையில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை மீண்டும் 58 ஆக குறைப்பது தொடர்பாகவும் முதல்வர் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியானது.

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வில்லியாக ‘தெய்வமகள்’ காயத்ரி – வெளியான ப்ரோமோ!

இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து 67 லட்சத்து 76 ஆயிரம் பேர் வேலைக்காக காத்திருக்கின்றனர். இதில் 12 லட்சம் பட்டதாரிகள் மற்றும் வயது குறைந்த இளைஞர்களும் அடக்கம். இந்த வேலையின்மைக்கு முந்தைய அதிமுக அரசு முக்கிய காரணமாகும். வேலைவாய்ப்புகள் அதிகரித்து, இளைஞர்களின் துயர் நீங்கும் வகையில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 இல் இருந்து 58 ஆக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here