தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு வயது உயர்வை திரும்ப பெற வேண்டும் – ஆசிரியர் மன்றம் கோரிக்கை!!
ஆசிரியர்கள் உள்பட அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை தமிழக அரசு 60 ஆக உயர்த்தியுள்ளதை திரும்ப பெற வேண்டும் என்று தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் சண்முகநாதன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஓய்வு வயது:
தமிழகத்தில் முன்னதாக அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கால் புதிதாக பணியாளர்களை பணியமர்த்த முடியாத சூழலில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 59 ஆக உயர்த்தி அறிவித்தது. இந்நிலையில் நடப்பு ஆண்டில் தமிழக முதல்வர் அரசு பணியாளர்களின் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தியுள்ளார்.
தமிழக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ.600 உதவித்தொகை – மாவட்ட அதிகாரி தகவல்!!
முதல்வரின் அறிவிப்புக்கு பல தரப்புகளில் இருந்து ஆதரவு வந்தாலும், ஒரு சில தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் சண்முகநாதன் அவர்கள் ஓய்வு வயது உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக அரசு புதிய வேலைவாய்ப்புகள் ஏதும் உண்டாக்காத நிலையில் படித்த இளைஞர்களுக்கு அரசு பணி என்பது கனவாகவே இருந்து வருகிறது.
அரசு அறிவிப்பின் படி, அரசு பணியாளர்களுக்கு மாத ஊதியம் மட்டுமே வழங்க முடியும். ஓய்வூதிய பலன்கள் எதுவும் இல்லை என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் தமிழக அரசின் நிதி நிலையை அறிய முடிகிறது. தமிழக இளைஞர்களின் அரசு பணிக்கான கனவை சிதைக்கும் இந்த ஓய்வு வயது உயர்வு அறிவிப்பை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
For Online Test Series
கிளிக் செய்யவும்
To Join Whatsapp
கிளிக் செய்யவும்
To Join Facebook
கிளிக் செய்யவும்
To Join Telegram Channel
கிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channel
கிளிக் செய்யவும்