கலை அறிவியல் கல்லூரிகளில் சான்றிதழ் பதிவேற்றுவதில் சிக்கல் !!!

0
கலை அறிவியல் கல்லூரிகளில் சான்றிதழ் பதிவேற்றுவதில் சிக்கல்
கலை அறிவியல் கல்லூரிகளில் சான்றிதழ் பதிவேற்றுவதில் சிக்கல்

கலை அறிவியல் கல்லூரிகளில் சான்றிதழ் பதிவேற்றுவதில் சிக்கல் !!!

தமிழகத்தில் ஜூலை 16 ஆம் நாள் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியதனை தொடர்ந்து உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் அணைத்து கல்லூரிகளிலும் தொடங்கப்பட்டிருந்தது.

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு இளங்கலை பாடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு ஆன்லைன் பதிவுகள் கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதி முதல் தொடங்கி 31 ஆம் தேதி வரை நடைபெற்றது.

மொத்தமுள்ள 190 கல்லூரிகளின் 72 ஆயிர காலியிடங்களுக்கு 3 லட்ச விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. இதனால் அடுத்த கட்ட நடவடிக்கையாக சான்றிதழ் பதிவேற்றம் சமீபத்தில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி அன்று தொடங்கியது. வரும் 10 ஆம் தேதி வரை பணியினை மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் பதிவேற்றங்கள் தொடங்கியதில் இருந்து பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் கடும் அவதிக்குளாகியுள்ளனர். குறிப்பாக விண்ணப்பப் பதிவிற்கான கடைசி தேதியில் விண்ணப்பப்பதிவு செய்தவர்களுக்கு சான்றிதழ் பதிவேற்ற முடியவில்லை.

இந்த கோளாறுகளை விரைவில் சரி செய்ய மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதனை சரி செய்ய  [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 044-2235 1014, 2235 1015, 2235 0523 & 2235 0527 என எண்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!