கலைமாமணி விருதுகள் 2020 – தமிழக அரசு அறிவிப்பு!!

0
கலைமாமணி விருதுகள் 2020 - தமிழக அரசு அறிவிப்பு
கலைமாமணி விருதுகள் 2020 - தமிழக அரசு அறிவிப்பு
கலைமாமணி விருதுகள் 2020 – தமிழக அரசு அறிவிப்பு!!

தமிழக அரசின் சார்பாக ஆண்டு தோறும் வழங்கப்படும் கலைமாமணி விருது 2019-2020ம் ஆண்டிற்கான பட்டியல் வெளியிடடுள்ளது. விருது பெறுவோர் பட்டியலில் பல முக்கிய நடிகர், நடிகையர் இடம் பெற்றுள்ளனர்.

கலைமாமணி விருது:

கலை மற்றும் பண்பாட்டில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு அவர்களின் செயல்திறனை ஊக்குவிக்கும் நோக்கில் தமிழக அரசினால் வழங்கப்படும் உயரிய விருதாக கலைமாமணி விருது கருதப்படுகிறது. 1954ம் ஆண்டில் இருந்து கலைமாமணி விருது வழங்கபடுகிறது. ஆண்டுதோறும் கலை துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும்.

மதுரை காமராஜர் கல்லூரி மூடல் – ஆசிரியருக்கு கொரோனா தொற்று எதிரொலி!!

விருது அறிவிப்பு:

இந்நிலையில் 2019-2020ம் ஆண்டிற்கான கலைமாமணி விருது பெற்றவர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழ் திரையுலகினை சேர்ந்த பல முக்கிய கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திரையுலகின் ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பாக செயல்பட்டவர்களை அரசு தேர்வு செய்துள்ளது. அதன்படி, நடிகர்கள் சிவகார்த்திகேயன், ராமராஜன், யோகிபாபு, நடிகைகளில் பழம்பெறும் நடிகையான சரோஜா தேவி, ஐஸ்வர்யா ராஜேஷ், சங்கீத, மதுமிதா, தேவதர்ஷினி, சௌகார் ஜானகி, உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

மேலும், தயாரிப்பாளர்கள் ஐசரி வேளாண், கலைப்புலி தாணு அவர்களுக்கும் இயக்குனர்கள், கவுதம் வாசுதேவ் மேனன், லியாகத் அலிகான் அவர்களுக்கும் கதாபாத்திர நடிகர் நடிகையரான நித்யா, சாந்தி வில்லியம்ஸ், நந்தகுமார், இசையமைப்பாளரான டி.இமான், தினா, அவர்களுக்கும், வசனகர்த்தா பிரபாகர், ஒளிப்பதிவாளர் ரகுநாத ரெட்டி, நடன இயக்குனர்கள் சிவசங்கர், ஸ்ரீதர், சண்டைப் பயிற்சியாளர்கள் ஜாக்குவார் தங்கம், தினேஷ் ஆகியோருக்கும் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விருது அறிவிக்கப்பட்டவர்கள் நாளை மலை 5 மணிக்கு தலைமை செயலகம் வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!