தமிழக அரசில் 274 VAO காலிப்பணியிடங்கள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

0
தமிழக அரசில் 274 VAO காலிப்பணியிடங்கள் - அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழக அரசில் 274 VAO காலிப்பணியிடங்கள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் TNPSC குரூப்4 & VAO தேர்வுக்கான விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று வரும் நிலையில் காலியாக உள்ள 274 கிராம நிர்வாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

VAO காலிப்பணியிடங்கள்:

தமிழகத்தில் 2022 ம் ஆண்டு தொடங்கியது முதல் அரசுத்துறை காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது அதிக தேர்வர்கள் எதிர்பார்த்த குரூப் 2,2A தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை TNPSC தேர்வாணையம் கடந்த மாதம் வெளியிட்டது. அதில் மே 21ம் தேதி (சனிக்கிழமை) தேர்வு நடைபெறும். பிப்ரவரி 23 முதல் மார்ச் 23ம் தேதி வரை குரூப் 2,2A தேர்வுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக குரூப்4 & VAO தேர்வு குறித்த அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகும் என்று தேர்வாணையம் தெரிவித்தது.

அதனை தொடர்ந்து இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் ஆகிய பணிகளுக்கு நடத்தப்படும் குரூப் 4 & VAO தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் மாத இறுதியில் வெளியானது. குரூப் 4 தேர்வை லட்சக்கணக்கான மக்கள் எழுதுகின்றனர். குரூப் 4 தேர்வுடன் அரசுத்துறைகளில் ஆரம்ப நிலை பணியிடங்களை இந்த தேர்வின் மூலம் நிரப்பப்படுகிறது. குரூப் 4 காலிப்பணியிடங்கள் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

TNPSC Group தேர்வுக்கு படித்து வருபவரா? – இதோ உங்கள் கவனத்திற்கு..!

இந்த குரூப் 4& VAO ஒரே ஒரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது. மொத்தம் 200 வினாக்கள் இடம்பெறும். ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். தற்போது TNPSC புதிய மாற்றத்தின் படி தேர்வில் தமிழ் மொழி தேர்வும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று வரும் நிலையில் 274 VAO பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேரவையில் தெரிவித்தார். மேலும் 10 வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்கள், 50 வருவாய் நிர்வாக அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும் என்றும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!