தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ஹாப்பி நியூஸ் – மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை! விரைவில் அமல்!

0
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ஹாப்பி நியூஸ் - மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை! விரைவில் அமல்!
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ஹாப்பி நியூஸ் - மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை! விரைவில் அமல்!
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ஹாப்பி நியூஸ் – மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை! விரைவில் அமல்!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அமோக ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்குப் பரிசாக, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உரிமைத் தொகை திட்டம் அமலுக்கு வரும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை திட்டம்:

தமிழகத்தில் கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிக்கையாக திமுக, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. இந்த நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில் திமுக தலைவர் மு. க.ஸ்டாலின் முதல் முறையாக முதலமைச்சராக பதவியேற்றார். ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்று சுமார் 9 மாதங்கள் ஆகி உள்ளது.

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மார்ச் 3 வரை இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இருப்பினும் தேர்தல் வாக்குறுதியாக அளித்த குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உரிமைத் தொகை திட்டம் இதுவரை அமலுக்கு வரவில்லை. இது குறித்து, நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக – பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தன. தற்போது குடும்பத் தலைவிகளுக்கு எப்போது உரிமைத் தொகை வழங்கப்படும் என்றக் கேள்வி எழுந்து வருகிறது. கடந்த 19ம் தேதி நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது.

அஞ்சல் நிலையத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு டிரைவர் வேலை – ரூ.63,200 வரை சம்பளம்!

குறிப்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் வார்டுகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை கொண்டாடும் விதமாக மக்களுக்கு பரிசு வழங்க திமுக திட்டமிட்டுள்ளது. எனவே குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை விரைவில் முதலமைச்சர் தொடங்க உள்ளதாக கோட்டை வட்டாரங்கள் கூறுகின்றன. இதன் அடிப்படையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களின் விவரங்களையும் கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளதாகவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!