தமிழக அரசு ஊழியர்களின் பதவி உயர்வு பட்டியல் – மறுசீராய்வு மனு தள்ளுபடி!!

1
தமிழக அரசு ஊழியர்களின் பதவி உயர்வு பட்டியல் - மறுசீராய்வு மனு தள்ளுபடி!!
தமிழக அரசு ஊழியர்களின் பதவி உயர்வு பட்டியல் - மறுசீராய்வு மனு தள்ளுபடி!!
தமிழக அரசு ஊழியர்களின் பதவி உயர்வு பட்டியல் – மறுசீராய்வு மனு தள்ளுபடி!!

தமிழக அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கு மதிப்பெண் அடிப்படையில் பட்டியல் தயாரிக்க அளிக்கப்பட்ட உத்தரவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனு தள்ளுபடி

தமிழக அரசு கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் டிஎன்பிஎஸ்சி மற்றும் டிஆர்பி போன்ற போட்டித்தேர்வுகள் மூலம் அரசு பணியில் உள்ள ஊழியர்களுக்கான பதவி உயர்வு பட்டியலுக்கு, இடஒதுக்கீடு மற்றும் இனசுழற்சி அடிப்படையில், உள்ஒதுக்கீடு முறையை பின்பற்றி வருகிறது. இந்த நடைமுறையை எதிர்த்து, டிஎன்பிஎஸ்சி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று ரேங்க் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் பல அரசு ஊழியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

TN Job “FB  Group” Join Now

அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2015 ஆம் ஆண்டு மதிப்பெண் அடிப்படையில் முதுநிலை பட்டியல் தயாரித்து அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கலாம் என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை நீதிமன்றம் ரத்து செய்து செய்தது. இந்நிலையில் மீண்டுமாக அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கு இடஒதுக்கீடு மற்றும் இனசுழற்சி அடிப்படையில் உள்ஒதுக்கீடு முறைகளை பின்பற்றலாம் என தமிழக அரசு சில மாற்றங்களை கொண்டு வந்தது.

அண்ணா பல்கலை தேர்வில் 70% பேர் தோல்வி – மாணவர்கள் அதிருப்தி!!

இதை எதிர்த்து அரசு ஊழியர்கள் மீண்டுமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன், ‘அரசு ஊழியர்களுக்கான பதவி உயர்வு அவர்களின் முதுநிலை மதிப்பெண் பட்டியலின் அடிப்படையில் தான் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு மற்றும் இனசுழற்சி உள்ஒதுக்கீடு அடிப்படையில் இருக்கக்கூடாது’ என 2019ஆம் ஆண்டு தீர்ப்பளித்தனர்.

நாடு முழுவதும் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு கொரோனா – சுகாதாரத்துறை தகவல்!!

இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை தமிழக அரசு அமல்படுத்தவில்லை என பாதிக்கப்பட்ட ஊழியர்கள் உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நான்கு வாரங்களில் அமல்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. Very bad life of last year corona days makkal life style, works ,lifetime achievement and children studies etc,etc were wedo don’t something this corona time next year intha maari oru corona virus world Ku aabathu vadhuchu makkal uyirukku yaarugha poruphu paavam janaka😷😷😷😷😷😷😷😷😷😷😷😷😷😷😷😷😷😷🤒🤒🤒🤒

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!