தமிழகத்தில் ‘இது’ குறித்து தகவல் தெரிவித்தால் பாராட்டு, வெகுமதி – மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் 'இது' குறித்து தகவல் தெரிவித்தால் பாராட்டு, வெகுமதி - மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் 'இது' குறித்து தகவல் தெரிவித்தால் பாராட்டு, வெகுமதி - மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் ‘இது’ குறித்து தகவல் தெரிவித்தால் பாராட்டு, வெகுமதி – மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு!

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு ஆணையத்தின் உத்தரவின்படி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை கண்டறிந்து அதனை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி பைகளை பயன்படுத்த கூடாது என்று தமிழ்நாடு அரசு 2018 ஆம் ஆண்டு ஜூன் 25ல் அறிவித்தது. இதில் பிளாஸ்டிக் கைப்பை, பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித டம்ளர , தட்டு, தெர்மாகோல் கப்பு, பிளாஸ்டிக் தாள் ஆகியன அடங்கும். மேலும் ஓட்டல்களில் உணவு பொருட்களை கட்ட பயன்படும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர் பைகள், பாக்கெட்டுகள், உறிஞ்சி குழாய்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

சேலம் மாவட்டத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – நவ.26ம் தேதி நேர்காணல்!

ஏனெனில் இந்த நெகிழி பைகள் எளிதில் மக்கும் தன்மை அற்றவை. ஒரே ஒரு நெகிழிப்பை மட்குவதற்கு பல ஆண்டுகள் ஆகும். இதனால் பல பிரச்சனைகள் ஏற்பட்டு இயற்கை சூழலுக்கு பெரும் ஆபத்துகள் ஏற்படுகின்றன. குறிப்பாக பிளாஸ்டிக் பொருட்களை எரிக்கும் போது அதிகமாக காற்று மாசடைகிறது. அந்த காற்றை சுவாசிக்கும் நாம் பல்வேறு நோய்களுக்கு உள்ளாக்கப்பட்டு மிகவும் சிரமப்படுகிறோம். இதனால் தேசிய பசுமை ஆணையம் பிளாஸ்டிக் மீது தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் நாளை (நவ.24) மின்தடை ஏற்பட உள்ள மாவட்டங்கள் – மின்வாரியம் அறிவிப்பு!

இவ்வாறு தேசிய பசுமை ஆணையம் விதித்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் செயற்படுத்த ஆணை பிறப்பித்துள்ளது. அதனால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகளை கண்டறிந்து தருவோருக்கு மிகுந்த பாராட்டும், வெகுமதியும் வழங்கப்படும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இந்த புகாரினை https://tnpcb.in/contact/php என்ற மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளம் மூலமாக தெரிவிக்கலாம். மேலும் இந்த புகாரை மின்னஞ்சல், கடிதம், வாட்ஸ்அப் அல்லது தொலைபேசி மூலமாகவும் தெரிவிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here