தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் புகார்!

0
தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் புகார்!
தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் புகார்!
தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் புகார்!

தமிழக அரசு பள்ளிகளில் 2021-2022ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளதால் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் அதனால் மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக் குறியாக உள்ளதாகவும் பெற்றோர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

ஆசிரியர்கள் பற்றாக்குறை:

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து முதல் கட்டமாக 9-12 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்றது. அடுத்த கட்டமாக தொடக்க மற்றும் நடுநிலை வகுப்புகளும் பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது முழுவதுமாக பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் ஏராளமான மக்கள் வேலையிழந்து சிரமப்பட்டனர். இந்த நேரத்தில் தனியார் பள்ளிகள் மாணவர்களின் கல்வி கட்டணத்தை செலுத்தும் படி பெற்றோர்களை வலியுறுத்தியது. பொருளாதார நெருக்கடியால் பெற்றோர்களால் கல்வி கட்டணத்தை செலுத்த முடியவில்லை.

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – அட்டவணை வெளியீடு!

அதனால் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களை அவர்களின் பெற்றோர்கள் அரசு பள்ளிகளில் சேர்க்க முற்பட்டனர். மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும், சலுகைகளையும் அறிவித்தது. இதனால் கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டு அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்தது. அதன்படி நடப்பு ஆண்டு மட்டும் சுமார் 2.5 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளியில் இருந்து அரசு அப்பள்ளியில் சேர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய ஆசிரியர்கள் இல்லாததால் கற்பித்தல் மற்றும் பள்ளி நிர்வாக பணிகளில் தொய்வு ஏற்படுவதாக புகார்கள் எழுந்து வருகிறது.

தமிழகத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்திருக்கும் நபர்களிடம் ரேஷன் கார்டு பறிமுதல் – அரசுக்கு வேண்டுகோள்!

மேலும் மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக் குறியாக உள்ளதாகவும் பெற்றோர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் உபரியாக உள்ள ஆசிரியர்களை தேவையான இடங்களுக்கு மாற்றிக் கொள்ள உத்தரவிட்டது. ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறுகின்றனர். மேலும் உடனடியாக ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here