Diploma படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலைவாய்ப்பு 2022 – உடனே விண்ணப்பியுங்கள்!

0
Diploma படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலைவாய்ப்பு 2022 - உடனே விண்ணப்பியுங்கள்!
Diploma படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலைவாய்ப்பு 2022 - உடனே விண்ணப்பியுங்கள்!
Diploma படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலைவாய்ப்பு 2022 – உடனே விண்ணப்பியுங்கள்!

டிப்ளமோ படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை விரிவாக பாப்போம்.

வேலைவாய்ப்பு

கொரோனா வைரஸ் காரணமாக இரண்டு வருட காலமாக எந்த ஒரு துறையிலும் வேலை வாய்ப்பு அறிவிப்புகளையும், விண்ணப்பங்களையும் அறிவிக்கப்படாமல் இருந்தன. ஆனால் படித்த இளைஞர்கள் அனைவரும் இரண்டு வருடமாக மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து பின்னர் ஏமாற்றம் அடைந்தனர். அந்த வகையில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் அந்த அந்த மாவட்டங்களில் அரசு பணிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – குடும்ப ஓய்வூதியம் குறித்த விளக்கம்!

அந்த வகையில் தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் கிராஜுவேட் அப்ரண்டிஸ் மற்றும் டெக்னீசியன் அப்ரண்டிஸ் பணிக்கான காலியிடங்களை அறிவித்துள்ளன. தகுதியான விண்ணப்பதாரர்கள் மே 25 முதல் ஜூன் 10 வரை காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அப்ரண்டிஸ் இரண்டு வகையான அப்ரண்டிஸ் உள்ளன. பட்டதாரி அப்ரண்டிஸ் 88 காலிப்பணியிடங்களும் மற்றும் டெக்னீஷியன் அப்ரண்டிஸ் 23 பணியிடங்களும் இருப்பதாக தெரிவித்துள்ளன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கல்வித் தகுதி, பட்டதாரி அப்ரண்டிஸ் பதவிகளுக்கு பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் எனவும் டிப்ளமோ அப்ரண்டிஸ் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளன. இந்த பதவிகளுக்கு வயது வரம்பு உண்டு. அரசு விதிகளின்படி, குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு மட்டும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும் என அறிவித்துள்ளன.

Exams Daily Mobile App Download

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி மே 25ம் மற்றும் NATS போர்ட்டலில் சேர்வதற்கான கடைசி தேதி ஜூன் 05ம் தேதியும் ,TWAD விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 10 என தெரிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான பட்டியல் ஜூன் 23 முதல் 24 வெளியிடப்படும் என அறிவித்துள்ளன. அந்தந்தத் துறைகளுக்கு ஏற்ப தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் பட்டியல் ஜூன் 15 ஆம் தேதி வெளியிடப்படும். இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான twadboard.tn.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!