தமிழக அரசு பணிக்கான போட்டித்தேர்வுகள் – ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் துவக்கம்!!

0
தமிழக அரசு பணிக்கான போட்டித்தேர்வுகள் - ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் துவக்கம்!!
தமிழக அரசு பணிக்கான போட்டித்தேர்வுகள் - ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் துவக்கம்!!
தமிழக அரசு பணிக்கான போட்டித்தேர்வுகள் – ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் துவக்கம்!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் போட்டி தேர்வுகளின் பயிற்சி வகுப்புகள் தற்போது துவங்கியுள்ளன. இதில் பொறியியல் துறை பணிக்கான பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் வழியாக நடத்தப்படுகிறது.

பயிற்சி வகுப்புகள்:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான தேர்வுகள் ஜூன் மாதம் 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக அரசு பணிக்கான தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் பயிற்சிகளை கொடுத்து வருகின்றன. அந்த வகையில் இந்த தேர்வுகளை எழுதுவதற்கு விண்ணப்பித்துள்ளவர்கள், தேர்வில் சிறப்பாக பங்கு பெறுவதற்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கம்.

TN Job “FB  Group” Join Now

இதன் படி ஜூன் மாதம் நடத்தப்படவுள்ள போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டு மையம் இலவச பயிற்சி வகுப்புளை அறிவித்துள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் இணையதளம் வழியாக நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளில் மாணவர்களுக்கு குழு விவாதம், பாட வாரியாக வகுப்புகள், மாதிரி தேர்வுகள் போன்ற பயிற்சிகள் கொடுக்கப்படவுள்ளன.

நாடு முழுவதும் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு? மத்திய அரசு ஆலோசனை!!

எனவே ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான தேர்வுகளை எழுதுபவர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தவிர இது குறித்த மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!