தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு புதுப்பிப்பு 2021-22 | மீண்டும் வாய்ப்பு!

0
தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு புதுப்பிப்பு 2021-22 | மீண்டும் வாய்ப்பு!
தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு புதுப்பிப்பு 2021-22 | மீண்டும் வாய்ப்பு!
தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு புதுப்பிப்பு 2021-22 | மீண்டும் வாய்ப்பு!

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுதாரர்கள் தங்கள் பதிவை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்க தவறிவிட்டார்கள். இவர்களுக்கு தற்போது ஒரு மாபெரும் வாய்ப்பை அரசு வழங்கியுள்ளது.

வேலைவாய்ப்பு பதிவு

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 2014, 2015,2016ம் ஆண்டுகளில் பதிவுதாரர்கள் தங்கள் பதிவை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்க தவறிவிட்டார்கள். இதனால் இவர்களுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை கிடைப்பதில்லை. அதனால் தமிழக அரசு இவர்களின் நலன் கருதி மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. அத்துடன் 2017, 2018 மற்றும் 2019 பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு ஏற்கனவே புதுப்பிக்க சலுகை வழங்கி இருந்தது. இதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில் மீண்டும் 3 மாதங்களுக்கு புதுப்பித்தல் சலுகையை நீட்டித்து வழங்கியுள்ளது.

IT ஊழியர்களுக்கு ஜாக்பாட் – 120% வரை சம்பளம் உயர்வு! புத்தாண்டில் சூப்பர் அறிவிப்பு!

முதலில் வேலைவாய்ப்பு பதிவை அலுவலகத்திற்கு நேரில் சென்று புதுப்பிக்க கூடிய நிலை இருந்தது. இப்போது அனைத்து துறைகளும் கணினிமயமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேலைவாய்ப்பு பதிவை ஆன்லைன் மூலமாக இணையதளத்தில் சென்று புதுப்பித்து கொள்ளலாம். இதற்கு https://tnvelaivaaippu.gov.in/ என்ற இணைதளத்தில் சென்று புதுப்பிக்க தவறிய பதிவினை புதுப்பித்து கொள்ளலாம். மேலும் தங்களின் கல்வித்தகுதி பற்றிய தகவல்களையும் இந்த இணையதளம் மூலமாகவே புதுப்பித்து கொள்ளலாம். புதுப்பித்தல் சலுகை வருகிற 2022 ஆம் ஆண்டு மார்ச் 1ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ.7000 பொங்கல் போனஸ் – முக்கிய கோரிக்கை!

மேலும் வெளிநாட்டினர்கள் 2022 ஆம் ஆண்டு மார்ச் 2ம் தேதிக்குள் விடுபட்ட பதிவினை புதுப்பித்து கொள்ளலாம். அத்துடன் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்களும் இதன் தங்கள் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்து கொள்ளலாம். இது தொடர்பாக மேலும் சில தகவல்களை பெற திருவள்ளூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம். 2014ம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதிக்கு முன் புதுப்பிக்க தவறியவர்களுக்கு எந்த வித சலுகையும் வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே புதுப்பிக்க தவறியவர்கள் கால அவகாசத்திற்குள் புதுப்பித்து கொள்ளுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here