தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு – 67.58 லட்சம் பேர் காத்திருப்பு!!

0
தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு - 67.58 லட்சம் பேர் காத்திருப்பு!!
தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு - 67.58 லட்சம் பேர் காத்திருப்பு!!
தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு – 67.58 லட்சம் பேர் காத்திருப்பு!!

தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி சுமார் 67 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலைக்காக காத்திருக்கின்றனர்.

வேலைவாய்ப்பு பதிவு :

தமிழக அரசு பணிகளில் சேர விரும்புபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களது கல்வி தகுதிகளை பதிவு செய்ய வேண்டும். மேலும் அதனை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிப்பு செய்ய வேண்டியது கட்டாயம். தற்போது அரசு பணிகள் பெரும்பாலும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுவதால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது காத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது – 58 ஆக குறைக்க கோரி வலியுறுத்தல்!

Follow our Instagram for more Latest Updates

அந்த வகையில் கடந்த 31.01.2023 நிலவரப்படி வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 67,58,698 ஆக உள்ளது. இதில் ஆண்களின் எண்ணிக்கை 31,49,398 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 36,09,027 ஆகவும் உள்ளது. மேலும் 273 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆவார்கள்.

மேலும் 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் 18,34,243 பேர். அடுத்தாக 19 – 30 வயதிற்குட்பட்டவர்கள் 28,56,606 பேர், 31 முதல் 45 வயதிற்குட்பட்டவர்கள் 18,31,930 ஆவார்கள். இதே போல வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கை 1,45,481 ஆகும்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!