பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு!

0
பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு!
பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு!
பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் பேரூராட்சி 110வது விதியின் கீழ் நகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த நகராட்சியில் பாண்டியநல்லூர் ஊராட்சி, சோம சமுத்திரம் ஊராட்சிகள் இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோளிங்கர் நகராட்சி:

தமிழகத்தில் கடந்த ஆட்சியில் அரசின் நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய 6 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. இதில் வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு ராணிப்பேட்டை என்ற புதிய மாவட்டம் உருவானது. தற்போது தமிழகத்தில் 38 மாவட்டங்கள் உள்ளது. இதில் ராணிப்பேட்டை 36வது மாவட்டமாக உள்ளது. இராணிப்பேட்டை மாவட்டம் தென்னிந்தியாவின் ஒரு தொழில்துறை மையமாகும். 330 வருவாய் கிராமங்களும், 288 ஊராட்சிகளும், 9 பேரூராட்சிகளும் உள்ளன.

செப்டம்பர் 4 வரை பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு – மாநில அரசு அறிவிப்பு!

இந்த 9 பேரூராட்சிகளில் சோளிங்கர் பேரூராட்சியும் ஒன்றாகும். இங்கு 18 வார்டுகள் உள்ளது. இதில் 35 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் அரசு மருத்துவமனை, நீதிமன்றம், பதிவாளர் அலுவலகம், போக்குவரத்து பனிமனைகள் போன்றவை உள்ளது. இங்கு 108 வைணவ திவ்ய தலங்களில் ஒன்றாக விளங்கும் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. இப்பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு சோளிங்கர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர்.

TN Job “FB  Group” Join Now

இந்த கோரிக்கையை சோளிங்கர் தொகுதி எம்எல்ஏ.,க்களும் சட்டமன்றத்தில் வலியுறுத்தினர். இதையடுத்து சட்டமன்ற கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் சோளிங்கர் பேரூராட்சியை தமிழக அரசு நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்துள்ளது. புதிதாக உதயமாகும் சோளிங்கர் நகராட்சி எல்லைக்குள் பாண்டியநல்லூர் ஊராட்சி, சோம சமுத்திரம் ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் நேற்று சென்னையில் உள்ள தாம்பரம் 16வது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!