குடியரசு தின விழா 2023: தமிழகத்தில் பிரமாண்டமாக கொண்டாட இட மாற்றம் – அதிகாரி தகவல்!!
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு குடியரசு தின விழா பிரமாண்டமாக கொண்டாடப்பட இருக்கிறது. அதனால் இந்த ஆண்டு பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வசதியாக இடத்தை தேர்வு செய்வது குறித்து தலைமைச் செயலகத்தில் அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
குடியரசு தினம்:
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக குடியரசு தின கொண்டாடுவதில் குறைந்த அளவில் அணிவகுப்புகளும், வாகன அணி வகுப்புகளும் மட்டுமே இடம் பெற்று இருந்தன. மேலும் பொதுமக்களும் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதனால் வர இருக்கும் 2023ம் ஆண்டு குடியரசு தினவிழாவை பிரமாண்டமாக கொண்டாட அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டிச. 3 தமிழகத்தில் மின்தடை எங்கெல்லாம் பவர் கட் தெரியுமா?- உங்கள் பகுதியும் இந்த லிஸ்டில் இருக்கா!
Follow our Instagram for more Latest Updates
அத்துடன் வழக்கமான அணிவகுப்பு, அலங்கார வாகனங்கள் ஆகியவை இடம்பெறும். பொதுவாகவே குடியரசு தின விழா மெரினா கடற்கரைக்கு அருகே இருக்கும் காமராஜர் சாலையில், டி.ஜி.பி., அலுவலகத்திற்கு முன்புள்ள காந்தி சிலைக்கு முன் நடைபெறும். ஆனால் தற்போது இங்கு மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதால் இந்த ஆண்டு குடியரசு தின விழா வேறு இடத்தில் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Exams Daily Mobile App Download
இது தொடர்பாக இன்று தலைமை செயலகத்தில் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, வருகிற 2023ம் ஆண்டில் குடியரசு தின விழா மெரினா கடற்கரையில் அமைந்துள்ள காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அல்லது விவேகானந்தர் இல்லம் அருகே கொண்டாட உள்ளது என கூறியுள்ளனர்.