தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல், 11 மாவட்டங்களில் மட்டும் – அரசு அறிவிப்பு!

0
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல், 11 மாவட்டங்களில் மட்டும் - அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல், 11 மாவட்டங்களில் மட்டும் - அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல், 11 மாவட்டங்களில் மட்டும் – அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் வருகிற ஜூலை 5ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் வகை 1ல் இடம் பெற்றிருக்கும் 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி கிடையாது தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

டாஸ்மாக் கடைகள்:

தமிழகத்தில் வருகிற ஜூன் 28ம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரும் நிலையில் அதனை வருகிற ஜூலை 5ம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் கடந்த முறை போல தற்போதும் மாவட்டங்கள் 3 வகையாக பிரிக்கப்பட்டு அதற்கு ஏற்றவாறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி வகை 2 மற்றும் 3 ல் இடம் பெற்றிருக்கும் 27 மாவட்டங்களில் தற்போது கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திருமண நிகழ்வுகளுக்கு புதிய நடைமுறைகள் – அரசு அறிவிப்பு!

அதன்படி 27 மாவட்டங்களில் பொது போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அரசு அலுவலகங்கள் அனைத்தும் 100% பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வகை 3ல் இடம் பெற்றிருக்கும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் துணி கடைகள், வணிக வளாகங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிப்பு அதிகமாக காணப்படும் 11 மாவட்டங்களுக்கு சிறிய அளவிலான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதன்படி கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட சில கடைகள் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக பல செயல்பாடுகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி காலணி விற்பனை, ஹார்டுவேர் கடைகள் உள்ளிட்ட கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வகை 1ல் உள்ள 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இயங்க அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த 11 மாவட்டங்களில் கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடிய நிலையில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!