அதிர்ச்சியளிக்கும் ஆபரணதங்கத்தின் விலை – இன்றைய நிலவரம் இதோ!
தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.விடுமுறை தினமான இன்று தங்கத்தின் விலை நிலவரம் என்னவென்று தெரிந்து கொள்வோம்.
தங்கம் விலை
உலகம் முழுவதும் தற்போது நிலவும் பொருளாதார சூழல் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அதனை தொடர்ந்து சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அத்துடன் ரஷ்யா – உக்ரைன் போரின் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதியில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் பழைய அரிசி விநியோகம் – பொதுமக்கள் புகார்..அமைச்சர் ஆய்வு!
இவற்றின் விளைவாக தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. நேற்று தமிழகத்தில் ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை திடீரென ரூ. 248 உயர்ந்து. நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து தங்கத்தின் விலை நாளை குறையும் என்று எதிர்பார்த்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
நேற்றைய விலையிலேயே அதாவது இன்றும் (08/01/2023) ஒரு கிராம் ரூ. 5, 021 க்கும் ஒரு சவரன் ரூபாய் 41,668 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல் வெள்ளியின் விலையும் மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.74.40 க்கு விற்பனையாகி வருகிறது