Gold Rate: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி.. குறைந்த ஆபரண தங்கத்தின் விலை – விவரம் உள்ளே!
தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை திடீரென சரிந்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை:
இந்தியாவில் தங்கத்தின் விலையானது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. இந்த ஆபரணத்தங்கத்தின் விலை தினசரி பங்கு சந்தை நிலவரத்தை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி ஒரு சவரன் 40,000 – ஐ தாண்டி விட்டது. இந்த விலை உயர்வு சாமானிய மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது தமிழகத்தில் தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை வரவுள்ளது. இப்பண்டிகையை முன்னிட்டு மக்கள் புது நகைகள் வாங்க திட்டமிடுவர். இந்த நேரத்தில் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்து ரூபாய் 41, 896 க்கு விற்பனையாகி வருகிறது.
அதே போல ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 23 குறைந்து 5, 237க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து இன்று ஒரு கிராம் வெள்ளி 120 காசுகள் குறைந்து ரூபாய் 73.70 விற்பனையாகி வருகிறது.