தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – தள்ளுபடி விபரங்கள் வெளியீடு!

0
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - தள்ளுபடி விபரங்கள் வெளியீடு!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - தள்ளுபடி விபரங்கள் வெளியீடு!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – தள்ளுபடி விபரங்கள் வெளியீடு!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக அளித்த கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் ரூ.69.49 கோடியில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மருத்துவர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

நகைக்கடன் தள்ளுபடி:

தமிழக அரசின், கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், மாநில தலைமை கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், தங்க நகைகளை அடமானம் வைத்து, பலரும் கடன் வாங்குகின்றனர். சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கூட்டுறவு வங்கிகளில், 5 சவரனுக்கு உட்பட்ட, நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தேர்தல் பிரசாரத்தின் போது தெரிவித்தார். இது, அக்கட்சியின் தேர்தல் வாக்குறுதியாகவும் அறிவிக்கப்பட்டது.

சென்னை: நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட் – ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1200 குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை!

இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்று, தி.மு.க ஆட்சியை பிடித்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், முதல்வராக பதவி ஏற்றார். தேர்தல் பிரசாரத்தின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அடிப்படையில் கூட்டுறவு சங்ககளிலில் நகைக்கடன் வாங்கியவர்கள் விவரங்கள் அதிகாரிகள் மூலம் சேகரிக்கப்பட்டது, இருப்பினும் கூட்டுறவு சங்ககளில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது தெரிய வந்தது. பல மாவட்டங்களில் ஒரே நபர் 300க்கும் மேற்பட்ட கடன்களைப் பெற்றது, போலி நகைகளை அடமானம் வைத்துக் கடன்பெற்றது, நகையே பெறாமல் கடன் கொடுத்தது எனப் பல்வேறு மோசடிகளை வெளிக்கொண்டு வந்தது.

ஏப்ரல் 10 முதல் மே 15ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை – கல்வித்துறை முடிவு!

இது தொடர்பாக, ஒவ்வொரு மாவட்டங்களிலும் முழுமையாக ஆய்வு நடத்தப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியிருந்தார். இரவு பகலாக நகைக்கடன், பயிர்க்கடன் விவரங்களை கூட்டுறவு அதிகாரிகளும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுக்கு பின்னர் தமிழக முதல்வர் இந்த நகைக்கடன் தள்ளுபடி பல்வேறு விதிமுறைகள் மூலம் செய்யப்படும் என்று உத்தரவு பிறப்பித்தார். அதன்படி கூட்டுறவு சங்கங்களில் உண்மையாக நகைக்கடன் பெற்றவா்களுக்கு நகைக்கடன் தள்ளுபடியானது. இதில், கரூர் மாவட்டத்தில் பொது நகை கடன் தள்ளுபடி மூலம் மொத்தம் 19,554 பேருக்கு ரூ.69.49 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது என தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!