TNFUSRC வனவர் & வன காப்பாளர் உடற்தகுதி தேர்வு 2020

0
TNFUSRC வனவர் & வன காப்பாளர் உடற்தகுதி தேர்வு 2020
TNFUSRC வனவர் & வன காப்பாளர் உடற்தகுதி தேர்வு 2020
TNFUSRC வனவர் & வன காப்பாளர் உடற்தகுதி தேர்வு 2020
உடற்தகுதி தேர்வு:

விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் குறைந்தபட்ச உடற்தகுதியை கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாடு வனச்சார்நிலை பணி விதிகளில் குறிப்பிட்டுள்ள வனவாழ் பழங்குடியின விண்ணப்பதாரர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் (பணி முறைமைகள்) சட்டம் 2016, பிரிவு 3 (ஜ்)ல் குறிப்பிட்டுள்ள பழங்குடியின விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் குறைந்தபட்ச உயரம் பெற்றிருக்க வேண்டும்.

  • ஆண் விண்ணப்பதாரர் – 152 செ.மீ.
  • பெண் மற்றும் திருநங்கை விண்ணப்பதாரர் – 145 செ.மீ.
உடல் அளவீட்டிற்கான சான்றிதழ்

அரசால் பணி நியமனம் செஞ்யப்பட்ட உதவி அறுவை சிகிச்சை நிபுணர் நிலைக்கு மேல் உள்ள மருத்துவரிடமிருந்து கீழ்குறிப்பிட்ட விவரங்களை கொண்ட மருத்துவ சான்றிதழை தேர்வு அறிவிக்கை நாளன்றோ அல்லது அதற்கு பின்னரோ பெறப்பட்டு, கேட்கப்படும் பொழுது தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத் திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

உயரம்                       செ.மீ

மார்பு அளவீடுகள்

மூச்சு உள் வாங்கும் நிலையில்            ……..செ.மீ
மூச்சு வெளியிட்ட நிலையில்               ……..செ.மீ
வித்தியாசம் (விரிவடைதல்)                 …….செ.மீ

உடற்திறன் தேர்வு:

விண்ணப்பதாரர்கள் கீழ் குறிப்பிட்ட தூரத்தினை நான்கு மணி நேரத்திற்குள் வெற்றிகரமாக நடந்து கடக்க வேண்டும்

ஆண் விண்ணப்பதாரர்கள் ………. 25 கி.மீ.
பெண் மற்றும் திருநங்கை விண்ணப்பதாரர்கள் ……….16 கி.மீ.

விண்ணப்பதாரர்களின் உடல் தகுதி மற்றும் வனத்துறையில் கடினமான வெளிப்புற வேலைகளை செய்யும்திறன் பெற்றவர் என சென்னையில் உள்ள மருத்துவக் குழுவினால் ஒப்புதலளிக்க பட்டிருத்தல் வேண்டும்.

TNFUSRC வனவர் & வன காப்பாளர் Model Question Paper

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!