
சென்னை நிறுவனத்தின் கண் சொட்டு மருந்து தயாரிப்பு நிறுத்தி வைப்பு – மருந்துக் கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் அறிவிப்பு!
சென்னையில் உள்ள குளோபல் பார்மா ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரித்த கண் சொட்டு மருந்தால் அமெரிக்காவில் பலருக்கு பார்வை பறிபோனதாக குற்றசாட்டு எழுந்துள்ள நிலையில், விசாரணை முடியும் வரை கண் மருந்து தயாரிப்புகளை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மருந்து நிறுவனம்
உலகளவில் உள்ள நாடுகளில் இந்தியாவில் தான் அதிகப்படியான மருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டு, பல நாடுகளில் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதற்கு மலிவு விலையில் மருந்துகளை இந்திய நிறுவனங்கள் உற்பத்தி செய்வதே காரணமாக உள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள குளோபல் பார்மா ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கண் சொட்டு மருந்தை பயன்படுத்திய அமெரிக்காவை சேர்ந்த பலருக்கு பார்வை பறிபோய்விட்டதாகவும், ஒருவர் பலியாகி இருப்பதாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
“அக்னிபாத்” திட்டத்தில் ஆட்சேர்ப்பு முறை மாற்றம் – மத்திய அரசின் புதிய அறிவிப்பு!
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில் இது குறித்து குளோபல் பார்மா ஹெல்த்கேர் நிறுவனத்தில் தமிழ்நாட்டின் மருந்துக் கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் மற்றும் மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர்கள் ஆய்வு நடத்தினார்கள். மேலும் விசாரணை முடியும் வரை குளோபல் பார்மா ஹெல்த்கேர் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் கண் மருந்து தயாரிப்புகளின் வகையின் கீழ் அனைத்து தயாரிப்புகளின் உற்பத்தி நடவடிக்கைகளை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டாளர் டாக்டர் பிவி விஜயலட்சுமி கூறுகையில் கண் சொட்டு மருந்து தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு, இந்த மாதிரிகள் சென்னையில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டிடியூட் உட்பட தமிழகத்தில் உள்ள இரண்டு ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.