தமிழக அரசு வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியோர் கவனத்திற்கு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

0
தமிழக அரசு வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியோர் கவனத்திற்கு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழக அரசு வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியோர் கவனத்திற்கு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழக அரசு வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியோர் கவனத்திற்கு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

கரூர் மாவட்டத்தில் 2018,2019ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறி இருந்தால் வரும் 2022 ஆம் ஆண்டு மார்ச் 1ம் தேதிக்குள் புதுப்பித்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு புதுப்பிப்பு:

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசு பணி வழங்கப்பட்டு வருகிறது. முதல் முறை பதிவு செய்த பிறகு ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை வேலை வாய்ப்பு பதிவை புதுப்பித்தல் அவசியம். ஆன்லைன் மூலமும் நேரடியாகவும் சென்று மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் பதியாலம் மற்றும் புதுப்பிப்பு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் தங்களது கல்வி தகுதியை பதிவு செய்வது அவசியம்.

CBSE 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 2ம் பருவத்தேர்வு குறித்த விபரங்கள்!

தற்போது வேலை அலுவலகத்திற்கு செல்லாமல் வீட்டிலிருந்தே புதுப்பிக்க ஆன்லைன் மூலம் புதுப்பிக்கவும், கல்வித்தகுதியை அவ்வபோது பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. மூன்று ஆண்டுக்கு ஒரு முறை வேலை வாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு தற்போது கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 2014, 2015, 2016, 2017, 2018, 2019 ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறி இருந்தால் 2022ம் ஆண்டு மார்ச் மாதம் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆதார் கார்டில் முகவரி, DOB விபரங்களை மாற்ற விரும்புவோர் கவனத்திற்கு – முக்கிய தகவல்!

ஏற்கனவே வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த நிலையில், தற்போது, மேலும் மூன்று மாதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 1ம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது மாவட்ட அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரடியாக சென்றோ, பதிவு அஞ்சல் மூலம் விண்ணப்பம் அளித்தோ புதுப்பித்துக் கொள்ளலாம். இதனை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு புதுப்பித்து பயன்பெறலாம் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!