தமிழகத்தில் பிப். 9 அரசு வேலைவாய்ப்பு முகாம் – மாத சம்பளமாக ரூ.14,996! மிஸ் பண்ணிடாதீங்க!

0
தமிழகத்தில் பிப். 9 அரசு வேலைவாய்ப்பு முகாம் - மாத சம்பளமாக ரூ.14,996! மிஸ் பண்ணிடாதீங்க!
தமிழகத்தில் பிப். 9 அரசு வேலைவாய்ப்பு முகாம் - மாத சம்பளமாக ரூ.14,996! மிஸ் பண்ணிடாதீங்க!
தமிழகத்தில் பிப். 9 அரசு வேலைவாய்ப்பு முகாம் – மாத சம்பளமாக ரூ.14,996! மிஸ் பண்ணிடாதீங்க!

தமிழகத்தில் வேலைவாய்ப்பு முகாம்களை பல்வேறு இடங்களில் ஏற்படுத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகின்றனர். இதனை தொடர்ந்து ஈரோட்டில் பிப்ரவரி 9ஆம் தேதி அன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

வேலைவாய்ப்பு முகாம்

தமிழகத்தில் கொரோனா காரணமாக ஏராளமான இளைஞர்கள் வேலையை இழந்துள்ளனர். அதனால் தமிழகத்தில் வேலையில்லா நிலையை போக்க பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்களை ஏற்படுத்தி அதன் மூலமாக வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்கி தருகிறது. இதனை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் பணிக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க ஈரோட்டில் வருகிற பிப்ரவரி 9ம் தேதி அன்று வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த முகாம் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

IPL அப்டேட்: பிப். 12 இல் தொடங்கும் மெகா ஏலம் – BCCI வெளியிட்ட விதிமுறைகள்!

இந்த முகாமுக்கு 22 வயது முதல் 35 வயது உள்ளவர்கள் வரை கலந்து கொள்ளலாம். அத்துடன் இதில் கலந்து கொள்ள 162.5 செ.மீ. உயரம் உள்ளவராக இருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பு முகாமில் செவிலியர் பணியிடத்திற்கு பிஎஸ்சி நர்சிங், டிஜிஎன்எம், பிஎஸ்சி விலங்கியல், தாவரவியல், உயிரி வேதியியல், நுண் உயிரியல், உயிரி தொழில்நுட்பம், வேதியியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். அத்துடன் இதில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் ஏஎன்எம், டிஎப்டிஎன், டிஎன்ஏ, டிஎம்எல்டி அல்லது டி.பார்ம் ஆகிய படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் கலந்து கொள்ளலாம்.

பிரசார் பாரதியில் ரூ.50,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

அத்துடன் வாகன ஓட்டுநர் பணிக்கு இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தபட்சமாக 3 ஆண்டுகள் முடிவடைந்து இருக்க வேண்டும். இந்த முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு ரூ.14,996 ஊதியம் மற்றும் இதர படிகள் வழங்கப்படுகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படுவர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் 12 மணி நேர சுழற்சி முறையில் இரவு அல்லது பகல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களின் அசல் சான்றிதழை கொண்டு வர வேண்டும். மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற 7418308513, 9944426044 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here