தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு புதுப்பித்தல் – கால அவகாசம் நீட்டிப்பு!

0
தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு புதுப்பித்தல் - கால அவகாசம் நீட்டிப்பு!
தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு புதுப்பித்தல் - கால அவகாசம் நீட்டிப்பு!
தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு புதுப்பித்தல் – கால அவகாசம் நீட்டிப்பு!

தமிழக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசுப் பணிக்காக காத்திருப்பவர்கள், அந்த பதிவுகளை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை இன்னும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு புதுப்பித்தல்

தமிழக அரசுத்துறைகளில் பணிபுரிய வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் அரசின் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பவர்களுக்கு பணியின் பொது முன்னுரிமை அளிக்கப்படுவது உண்டு. அதன் கீழ் இதுவரை லட்சக்கணக்கான பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். மேலும் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்திருப்பவர்கள் அந்த பதிவை அடிக்கடி புதுப்பிப்பது அவசியமாகும்.

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் – அமைச்சர் விளக்கம்!

இந்நிலையில் 2014, 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் தங்களது பதிவுகளை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டிருந்தது. தற்போது இந்த அவகாசம் இன்னும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக கோவில்களில் மொட்டை அடிக்க இனி கட்டணம் இல்லை – அமைச்சர் அறிவிப்பு!

மேலும் கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு அரசு வழங்கி வரும் ஊக்கத்தொகையின் அளவும் தற்போது ரூ.2,400 ஆக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அமைப்புசாரா ஓட்டுநர்களுக்கான இயற்கை மரண உதவித்தொகையை ரூ.50 ஆயிரமாக உயர்த்தியும், கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தினக்கூலி தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் வீட்டு வசதி திட்டத்தை அறிமுகம் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!