தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறி தேர்வு – பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!!

0
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறி தேர்வு - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!!
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறி தேர்வு - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!!
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறி தேர்வு – பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!!
தமிழகத்தில் உள்ள 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட உள்ள திறனறி தேர்வுகளை மாணவர்கள் வீட்டில் இருந்த படியே எழுத வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு:

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிக அளவில் உள்ளதால் தமிழக அரசு பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவிட்டது. இதனால் மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்படவில்லை. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு தீவிர கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தற்போது 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் நடைபெறுவதால் அவர்களுக்கு மட்டும் பள்ளிகள் செயல்படுகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் 20 முதல் சுற்றுலா தலங்கள் மூடல் – புதிய கட்டுப்பாடுகள் அமல்!!

தேர்வின்றி தேர்ச்சி:

கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் தமிழகத்தில் 12ம் வகுப்பு தவிர அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக முதல்வர் அறிவித்தார். ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும் வீட்டில் இருந்தே பாடங்களை கற்கவும் உத்தரவிட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

திறனறி தேர்வு:

1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது குறித்து ஆசிரியர்கள் அனைவரும் அதிருப்தியில் இருந்தனர். இதனால் 1 முதல் 9ம் வகுப்பு வரை திறனறி தேர்வுகளை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் வீட்டில் இருந்தவாறே திறனறி பயிற்சி புத்தகங்களில் உள்ள கேள்விகளுக்கு பதில் எழுத அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்வின் முடிவில் மாணவர்களின் கற்றல் திறனை பட்டியல் தயாரித்து மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்ட அறிக்கையில் குறிப்பிடப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here