அரசு மருத்துவர்களுக்கு மேற்படிப்பில் ஒதுக்கீடு இல்லை !! – உச்ச நீதிமன்றம் அதிரடி !!!

0
அரசு மருத்துவர்களுக்கு மேற்படிப்பில் ஒதுக்கீடு இல்லை !! - உச்ச நீதிமன்றம் அதிரடி !!!
அரசு மருத்துவர்களுக்கு மேற்படிப்பில் ஒதுக்கீடு இல்லை !! - உச்ச நீதிமன்றம் அதிரடி !!!

அரசு மருத்துவர்களுக்கு மேற்படிப்பில் ஒதுக்கீடு இல்லை !! உச்ச நீதிமன்றம் அதிரடி !!!

அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் இந்த ஆண்டு ஒதுக்கீடு இல்லை என உச்ச நீதிமன்றம் தற்போது ஒரு அதிரடி தீர்ப்பினை வெளியிட்டுள்ளது. அது குறித்து கீழே தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவ மேற்படிப்பு !

அரசு டாக்டர்களுக்கு சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிட தமிழக அரசு அண்மையில் ஒரு அரசாணையை வெளியிட்டது. இது குறித்து சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பும் அரசு சார்பாகவே வந்தது. ஆனால் இந்த உத்தரவுக்கு எதிராக ஒடிசா, தமிழகம், உத்தரபிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 13 டாக்டர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

ஒதுக்கீடு இல்லை !

தமிழக அரசு, முதுகலை படிப்பில் அரசு டாக்டர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 50 சதவீத இட ஒதுக்கீடு அனைத்து பிரிவினருக்குமானது, குறிப்பிட்ட பிரிவினருக்கானது இல்லை என்றும், இந்த விவகாரம் தமிழக அரசின் கொள்கை முடிவு சார்ந்தது என்று இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கில் இருதரப்பிலும் விசாரித்த நீதிமன்றம் தற்போது தீர்ப்பினை வழங்கியுள்ளது.

அந்த தீர்ப்பில், மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டு இல்லை என உத்தரவிட்டது. உச்சநீதிமன்றதத்தின் இந்த தீர்ப்பால் 25 கல்லூரிகளில் 584 இடங்கள் ஒதுக்கீடு இந்த ஆண்டு வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!