தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ் – துணை முதல்வர் திட்டம் !!

11
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ் - துணை முதல்வர் திட்டம் !!
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ் - துணை முதல்வர் திட்டம் !!
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ் – துணை முதல்வர் திட்டம் !!

தமிழகத்தில் தற்போது வரை 1 முதல் 11ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆல்பாஸ் பற்றிய அறிவிப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று தமிழக துணை முதல்வர் அறிவித்துள்ளார்.

தமிழக பள்ளிகள்:

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று காரணமாக அறிவித்த ஊரடங்கினால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இதனால் கடந்த ஆண்டில் 12ம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.

வங்கிகளுக்கு தொடர் விடுமுறை – அதிரடி அறிவிப்பு!!

12ம் வகுப்பு மாணவர்களில் ஒரு சில பாட பிரிவுகளுக்கு மட்டும் ஊரடங்கிற்கு முன்னர் பொதுத்தேர்வுகள் முடிந்திருந்தது. மற்ற பாட பிரிவுகளுக்கு இருந்து ஓர் ஒரு தேர்விற்கு மட்டும் தனியாக தேர்வு நாள் அறிவிக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. மற்ற வகுப்புகளுக்கு மாணவர்களின் வருகை பதிவேடு மற்றும் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதி தேர்வுக்கான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

நடப்பு ஆண்டு:

நடப்பு ஆண்டில் மாணவர்களுக்கான பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் கற்பிக்க தொடங்கப்பட்டது. 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் மாணவர்கள் பாதுகாப்பு கருதி 12ம் வகுப்பு தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு விட்டது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு – வாக்குச்சாவடிகளில் கேமரா பொருத்தும் பணி தீவிரம்!!

மேலும், தமிழகத்தில் முன்னதாவே 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைவர்க்கும் கல்வி திட்டத்தின் கீழ் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறும் திட்டம் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், தமிழக முதல்வர் நடப்பு ஆண்டில் 9 முதல் 11ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு பரிசீலனை!!

துணை முதல்வர் அறிவிப்பு:

நடப்பு ஆண்டில் சட்ட மன்ற தேர்தல் வாக்கு பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடக்க உள்ளதால் அரசியல் தலைவர்கள் அனைவரும் தீவிர வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வம் அவர்கள் தேனி மாவட்ட சீலையம்பட்டியில் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போது 12ம் வகுப்பு மாணவர்கள் அனைவரயும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக ராய்விப்பது குறித்து விரைவில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

11 COMMENTS

  1. Nice, this decision will spoil the future of the poor children, who depends on the mark for their future. If there is any educted person in that party, please suggest them. If you did so, you won’t get even a single vote in coming election.

  2. 𝒚𝒂𝒉 𝒕𝒉𝒊𝒔 𝒘𝒊𝒍𝒍 𝒔𝒑𝒐𝒊𝒍 𝒕𝒉𝒆 𝒔𝒕𝒖𝒅𝒆𝒏𝒕𝒔 𝒇𝒖𝒕𝒖𝒓𝒆

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!